படித்ததில் பிடித்தது... சிங்கப்பூரில் தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 11, 2020

படித்ததில் பிடித்தது... சிங்கப்பூரில் தமிழர் தலைவர்

அண்ணா.சரவணன்


துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்


டிசம்பர் 2 என்றால் தமிழர் தலைவர் அய்யா அவர்கள் எங்குள்ளார் என்பதை யாவரும் அறியார். நடித்துவரும் மனிதரெல்லாம் தலைவனாகி பிறந்த நாள் விழா கொண்டாடும் இந்நாட்டில், 9 வயதில் பெரியாரைக் கற்கத் தொடங்கி இன்றுவரை உலகிற்குப் பெரியாரைக் கற்பித்துக் கொண்டிருக்கும் எம் தலைவரின் பிறந்த நாளைக் கொண்டாட எம் தலைவர் அந்நாளில் எங்குள்ளார் என்பதே தெரிவதில்லையே!


யார் சொன்னால் கேட்பார் என்பதை யூகித்த இயக்கப் பொறுப்பாளர்கள் "மானமிகு சுயமரியாதைக் காரர்" கலைஞரைச் சந்தித்து "நண்பர்களின் ஏக்கத்தை எடுத்துரைத்தனர். அவர் சொன்னார், "எனக்கே "கீ"யாகவுள்ள எம் இளவல் தமிழர் தலைவரை நான் சம்மதிக்க வைக்கிறேன். நீங்கள ஏற்பாடு செய்யுங்கள்" எனக் கூறி, 75ஆம் பிறந்த நாள் எம் தலைமையில் நடைபெறும் என அன்புக் கட்டளையிட்டார். அன்புப் பிடியில் சிக்கிய நம் தலைவர் ஏற்றார் அக்கட்டளையை.


நாம் மட்டுமா மகிழ்ந்தோம்! உலகினில் உள்ள பெரியார் தொண்டர்கள் அனைவரும் பெருமகிழ்வு கொண்டனர். அவரவர் தம் பங்கிற்கு ஏதேனும் செய்ய வேண்டுமென முடிவெடுத்தனர். சிங்கப்பூர் 'தமிழவேள் கோ.சாரங்கப்பாணி' நற்பணி இயக்கத்தின் செயலர் மானமிகு எம்.இலியாஸ் அவர்கள் 1967 முதல் தமிழர் தலைவர் சிங்கப்பூரில் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகள், பேட்டிகள், கட்டுரைகள் என அனைத்தையும் தொகுத்து 'சிங்கப்பூரில் தமிழர் தலை வர்' எனும் சிறப்பான நூலினை வெளியிட்டுள்ளார்.



ஒரு நாள் திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலா ளர் வி.ஜி.இளங்கோ - கவிதா அவர்களைச் சந்திக்க சென்றபோது, அவர்கள் வரவேற்பறையில் இருந்த இந்நூலை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். என்னை மிகவும் கவர்ந்தது... தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஆசிரியரின் சுற்றுப்பயணம், திடல், திருச்சி என எங்கு கேட்டாலும் இந்நூல் கிடைக்கவில்லை. மீண்டும் அவர்களிடமே சென்று படித்துவிட்டுத் தருகிறேன் என கேட்டபோது எனது விருப்பம் அறிந்து எனக்கே அன்பளிப்பாக வழங்கினார்கள்.


என்னுடைய பணிச்சுமையின் காரணமாக படிக்க இயலாமல் இருந்தது. தற்போது தந்த கட்டாய விடு முறையில் முதலில் இந்நூலை தொடக்கத்திலிருந்து, சுவைத்து சுவைத்துப் படித்துக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் தமிழர் தலைவர் அவர்கள் காணொ லிக் காட்சியில் பேசும்போது, நூல்களை படியுங்கள்! படித்ததை எழுதுங்கள்! அதற்கு 'படித்ததில் பிடித்தது' என தலைப்பிடுங்கள் எனக் கூறினார். எனவே, தட்டுத் தடுமாறி முதன்முதலாக இப்படி எழுதுகிறேன். நம் குடும்பத் தலைவர் நம்மை எல்லா வகையிலும் பயிற்று வித்து வருகிறார் என்பதற்கு நானே எடுத்துக்காட்டு!


சி திருமண விழா, இல்லத் திறப்பு விழா, படத்திறப்பு, கருத்தரங்கு, பேட்டி, பெரியார் புத்தாயிரம், வரவேற்பு உபசரிப்பு விழா, பிரிவு உபசரிப்பு விழா, பிறந்த நாள் விழா, விருந்தோம்பல் நிகழ்வு, முப்பெரும் விழா, பாராட்டு விழா, இலக்கிய வட்டக் கலந்துரையாடல், மனிதநேய மன்ற விழா, நூற்றாண்டு விழா, நூல் வெளி யீட்டு விழா, பெரியார் கண்ட வாழ்வியல், வானொலி உரை, காலச்சக்கரம், ஆசிரியர் தீட்டிய கட்டுரைகள் என இந்நூலில் ஆசிரியரின் உரைகள் அப்படியே வழங்கப்பட்டுள்ளன.


சி கழகப் பொறுப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் இந்நூலைப் படித்து குறிப்பு எடுத்துக்கொண்டு மேற் கண்ட ஏதேனும் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றச் சென்றால் 'ஆசிரியர் பேசியுள்ள கருத்து களை' அப்படியே அங்கே பேசிவிட்டு வந்துவிட முடியும். பொதுவாக புதிய விடுதலை சந்தாதாரர்களிடம் நான் சொல்வது 'நீங்கள் ஆசிரியரின் உரையை முதலில் படியுங்கள்; வாழ்வியல் சிந்தனையைப் படியுங்கள்; தொடர்ந்து மருத்துவக் குறிப்பு, மகளிர் அரங்கம், இளைஞர் அரங்கம், அறிவியல் அரங்கம், பகுத்தறிவுக் களஞ்சியம், இயக்க வரலாறு, தந்தை பெரியார் கட்டுரை இப்படி படிக்கத் தொடங்குகள் என சொல்லி சந்தா சேர்ப்பதுதான் வழக்கம். அந்த வகையில் இந்நூல் முழுக்க முழுக்க ஆசிரியரின் உரைத் தொகுப்பாக உள்ளதால் நமது நண்பர்கள், உறவினர்களுக்குக் கொடுக்கவும் வாய்ப்பாக இருக்கும். புதியவர்கள் படித்தால் 'தந்தை பெரியார் கொள்கை' என்பது எப்படி வாழ்க்கை நெறியாக உள்ளது என்பதை புரிந்து கொள்வார்கள்.


சி ஆசிரியர் அவர்கள் தனது அணிந்துரையில் 'நான் சிங்கப்பூருக்கு சென்று திரும்புகையில் 'பெற்றுக் கொண்டவையோ குறைவு; கற்றுக்கொண்டு வந்த வையே அதிகம்' எனக் குறிப்பிடுகிறார்.


சி விடுதலையின் முன்னாள் துணை ஆசிரியரும் 'சிங்கப்பூர் தமிழ் முரசு' முன்னாள் ஆசிரியருமான தமிழறிஞர் வை.திருநாவுக்கரசு பி.பி.எம். அவர்கள் தனது வாழ்த்துரையில் 'சிங்கப்பூர் சமுதாயத்தையும் அதன் போக்குகளையும் சிறப்புகளையும் எவ்வளவு ஆழ்ந்து படித்துத் தன் கருத்துகளை நயமாகவும் நியாய மாகவும் வீரமணி சொல்லுகிறார். சிங்கப்பூர் பற்றிய விவரங்களை தமிழ்நாட்டிலும் பிற நாடுகளிலும் வாழும் தமிழர்கள் அறிந்துகொள்ள இந்நூல் துணை புரியும் எனப் பாராட்டியுள்ளார்.


சி சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் - சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தின் பேரா.டாக்டர் சுப.திண்ணப் பன் அவர்கள் தனது வாழ்த்துரையில் "பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பாரில் எங்கும் பரப்பும் பணிக்கு வேரும் விழுதுமாகவும், நீரும் வேலியுமாகவும் இருப்பவர் தமிழர் தலைவர் என்னும் அய்யா வீரமணி அவர்களின் பேச்சாற்றல், கருத்தாழமிக்க எழுத்தாற்றல் தென்படும் சிந்தனைத் தெளிவினை இந்நூல் உணர்த்தும்" எனப் பாராட்டியுள்ளார்.


சி இந்நூலினைத் தொகுத்து வழங்கியுள்ள எம்.இலியாஸ் அவர்கள் நுழைவாயில் என்ற பகுதியில் 'தந்தை பெரியாரின் தொண்டர், தன்மான இயக்கத்தின் தளபதி, சிறந்த பேச்சாளர், சிந்தனையாளர், தமிழ்-ஆங் கிலப் பத்திரிக்கையாளர், நூலாசிரியர், சமுதாயவாதி, வழக்குரைஞர், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக வேந்தர், சிறந்த நிருவாகி, சமூகநீதிக் காவலர்‘ என ஆசிரியர் அவர்களை அறிமுகம் செய்கிறார்.


சி மேலும் தமிழர் தலைவரின் பணிகளைக் கூற வந்தவர் "பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு, சமூகநீதி, தமிழ்மொழி - இனப் பாதுகாப்பு, அல்லல்படும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை, மனித உரிமை, பெண்ணுரிமை, மூடநம்பிக்கைக்கு எதிராகத் தொடர்ந்து போர்க்குரல் எழுப்புபவர், சமத்துவ சமு தாயத்தை உருவாக்குவதையே லட்சியமாகக் கொண்டு தந்தை பெரியார் காட்டிய வழியில் சளைக்காமல் பீடு நடை போடுபவர், தமிழர்களின் நலனை முன்னிலைப் படுத்தி இவர் பலப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி 40 முறைக்கு மேலாகக் கைதாகி சிறை சென் றுள்ளார்" எனப் பட்டியலிடுகிறார்.


சி தமிழர் தலைவரின் மேடைப் பேச்சு பற்றி குறிப்பிடும் இலியாஸ் அவர்கள் "சிந்தனை வளம், செயல் ஆற்றல், திடமுடன் எதையும் தீர்மானிக்கும் திறன், வெறும் சொற்சிலம்பம் ஆடாமல், கருத்துகளை அருமையாக கோர்வையாக கூறிடும் தனித்தன்மை, எதையும் எளிமையோடு எடுத்துரைக்கும் உத்தி இவை தமிழர் தலைவரின் தனித்தன்மை. மக்களின் சிந்தனை யைக் கிளரும் வகையில் எப்போதும் அவரது பேச்சு கள் அமைந்திடும். ஆதாரபூர்வமாக புள்ளி விவரங்க ளோடு வலுவான வாதங்களை எடுத்துரைப்பதில் வல்லவர் என்பதை சிங்கப்பூர் தமிழ் மக்கள் நேரடியாக கண்டவர்கள், காண்பவர்கள்" எனக் குறிப்பிடுகிறார்.


சி இந்நூலைப் பற்றிக் கூறிடும் மானமிகு எம்.இலியாஸ் அவர்கள்,   "சீரிய சிந்தனையாளர், பேரறி வாளர், டாக்டர் கி.வீரமணி அவர்கள் சிங்கப்பூரில் சிந்திய சிந்தனை முத்துக்களை வீணடிக்காமல், அவர் பேச்சைக் கேட்க வாய்ப்பில்லாதவர்களும் இன்றைய இளைஞர்களும் நாளைய தலைமுறையினருக்கும் அவர்கள் படித்துப் பார்த்து, சிந்தித்துப் பார்த்து பயனடையும் வகையில் ஓர் ஆவணமாகத் தொகுத்து இந்நூல் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களுக்கும் இந்நூல் பயன்படும்" என்கிறார்.


சி இந்நூலில் 1967 முதல் தமிழர் தலைவர் சிங்கப்பூரில் கலந்து கொண்டு உரையாற்றிய 39 நிகழ்வுகளின் உரை வழங்கப்பட்டுள்ளது.


சி நிருபர் கேட்ட "உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?" என்ற கேள்விக்கு "பெரியார் சொல்படி நடப் பதே" என பதிலளிக்கிறார் தமிழர் தலைவர் அவர்கள்.


சி இந்நூலை ஒருவர் முழுமையாகப் படித்தால் சிங்கப்பூர் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம். அந்நாட்டில் வாழும் மக்கள், அவர்களின் உழைப்பு, பண்பாடு, தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள், தந்தை பெரியார் இயக்கம், உழைப்பால் உயர்ந்தோர் தொண் டுள்ளம் கொண்டோர், சிங்கப்பூர் தேசிய நூலகமே நன்கொடையால் கட்டப்பட்டது என்ற உண்மை, ஒழுங்குமுறை, கட்டுப்பாடு, சட்டத்தை மதித்து நடத் தல், கடுமையான சட்டங்கள் முதலியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.


சி குறிப்பாக வாழ்விணையர் ஏற்பு விழா, படத்திறப்பு நிகழ்வு ஆகியவற்றில் தமிழர் தலைவர் அவர்களின் சொற்பொழிவு என்பது, ஒவ்வொரு கழகத்தவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களுக் குமே பாடமாக அமைந்துள்ளது.


சி தமிழர் தலைவர் அவர்களை சிங்கப்பூர் மக்கள் உயர்ந்து பார்த்துப் பாராட்டும் போது, தமிழர் தலைவர் தன்னை மிகவும் தாழ்த்திக்கொண்டு, 'எல்லாம் தந்தை பெரியாரிடம் தான் கற்ற பாடம் என்பதும், எனக்கு கிடைக்கும் பாராட்டு அனைத்தும் தந்தை பெரியாரின் உழைப்புக்கு, கொள்கைக்குத்தான் சேரும்‘ என அடக் கத்துடன் கூறும்போது பெரியார் தொண்டர்கள் அனை வரும் பாடம் கற்க வேண்டும் எனத் தோன்றுகிறது.


சி முதற் பதிப்போடு (2007) நின்றுள்ள இந்நூலை மீண்டும் மீண்டும் பதிப்பு செய்து அனைவரின் கையி லும், கழகத்தினர், அவர்களின் நண்பர்கள், உறவினர் கள் அனைவரிடமும் இடம் பெற வேண்டும்.


No comments:

Post a Comment