மருத்துவக் கல்வி பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 11, 2020

மருத்துவக் கல்வி பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுப்பு

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு கண்டனம்



சென்னை, மே 11- அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:


2020-ஆம் ஆண்டுக்கான மருத்துவ மேற் படிப்பில் (PG course) அகில இந்திய தொகுப்பு க்குரிய (All India Quota) இடங்களை மத்திய நல்வாழ்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.


இதில் மொத்தம் 9550 இடங்களில் பிற் படுத்தப்பட்டோருக்கு 371 இடங்களே _ அதா வது 3.8% இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. மாநி லங்களில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் 50% இடங்களை மத்திய அரசு பெறுகிறது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தொடர்ந்து சில ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்க்கு, இட ஒதுக்கீடு அவர்களுக்குரிய சதவீதத்தில் தரப்படுகிறது.



மத்திய அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரி இடங்களில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு தரப்படும் இடங்களில் மட்டுமே பிற்படுத்தப்பட் டோருக்கு 27% இட ஒதுக்கீடு தரப்படுகிறது.


இதில் இந்த ஆண்டு, EWS எனப்படும், அதாவது உயர்ஜாதியினரில் பொருளாதாரத் தில் பின் தங்கிய பிரிவினர்க்கு 653 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


எடுத்துக்காட்டாக, தமிழ் நாட்டில் மருத் துவ மேற்படிப்புக்கான இடங்கள் 1758. இதில் 50% இடங்கள் அதாவது 879 இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு தரப்பட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்கிறது மத்திய அரசு.


இந்த இடங்கள் தமிழ் நாட்டிலேயே இருக் குமானால், பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீடு அடிப்படையில் 440 இடங்கள் கிடைத்திருக்கும்.


கடந்த 2017, 2018 ஆண்டுகளிலும் அகில இந்திய தொகுப்புக்காக மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மருத்துவ இடங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரப்படாததால், 2018-ல் 3101 இடங்களையும், 2018-ல் 2429 இடங்க ளையும் பிற்படுத்தப்பட்டோர் இழந்துள்ளனர்.


மத்திய மருத்துவ அமைச்சகத்தின் இந்த சமூக அநீதியைச் சுட்டிக்காட்டி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பி லும், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியும் எந்த பலனும் இல்லை.


தற்போது 2020-ஆம் ஆண்டிலும் இதே நிலை தொடர்வதை பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு மத்திய சுகாதாரத்துறை அமைச் சருக்கு சுட்டிக்காட்டுகிறது. இந்த சமூக அநீதியைக் களைந்து மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பில் உள்ள அனைத்து இடங் களுக்கும்  பிற்படுத்தப்பட்டோருக்குரிய சட்டப் படியான 27% இட ஒதுக்கீட்டை அளித்திட வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment