சென்னை, மே 10 சென்னை தமிழகப் பொருளதார மேம்பாட்டுக்கான பரிந் துரையை அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இது தொடர்பாக தமி ழக அரசின் தலைமைச் செயலாளர் நேற்று வெளியிட்ட அரசாணை வரு மாறு:
-கரோனா வைரஸ் தாக் கமானது, தமிழகத்தின் பொருளதாரத்தில் இடைக் கால பாதிப்பை உருவாக்கி யுள்ளது. இந்தச் சூழலில், மாநில பொருளாதாரத்தை மேம்படுத்தி வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், ஏழை மக்களுக்குத் தேவையான வற்றை வழங்கவும், இவை தொடர்பான கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வும் பரிந்துரைகள் தேவைப் படுகின்றன. எனவே, பொரு ளாதார வல்லுநர்கள், நிபு ணர்கள் அடங்கிய உயர் மட்டக் குழுவை அமைக்க அரசு முடிவு எடுத்துள்ளது.
அதன்படி, ரிசர்வ் வங்கி யின் முன்னாள் ஆளுநரும் பிரதமரின் பொருளதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவருமான சி.ரங்கராஜன் தலைமமை யில் குழு அமைக் கப்படுகிறது. இக்குழுவில் முன்னாள் தலைமைச் செய லாளர் என்.நாராயணன், சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் பி.துரை சாமி, வேளாண் பல்கலை. துணைவேந்தர் என்.குமார், சென்னை பொருளதாரப் பள்ளியின் இயக்குநர் கே.ஆர். சண்முகம், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் இயக்குநர் பி.ஜிபாபு, முரு கப்பா குழும முன்னாள் தலைவர் ஏ.வெள்ளையன், இந்தியா சிமென்ட்ஸ் துணைத் தலைவர் என்.சீனிவாசன், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன், இந்தியன் வங்கி மேலாண் இயக்குநர் பத்மஜா சுந்துரு, ஈக்விடாஸ் வங்கி மேலாண் இயக்குநர் பி.என்.வாசு தேவன், பொது நிதி நிபுணர் எம். கோவிந்தராவ், சென்னை அய்அய்டி பேரா சிரியர் எம்.சுரேஷ்பாபு, யுனி செப் ஒருங்கிணைப்பா ளர் பினகி சக்ரபர்த்தி ஆகி யோர் இடம்பெற்றுள்ள னர்.
அரசு சார்பில், நிதித் துறை செயலாளர் ஒருங் கிணைப்பாளராக செயல் படுவார். இதுதவிர, தொழில், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, வீட் டுவசதி, தகவல் தொழில் நுட்பம், சிறகுறு நடுத்தர தொழில்கள், சுற்றுலா, கைத்தறித் துறை, தொழி லாளர் துறைச் செயலாளர் களும் உறப்பினர்களாக இருப்பார்கள்.
இந்தக் குழுவினர், பொருளாதாரத்தை மேம் படுத்துவதற்கான வாய்ப் புகள், அதில் உள்ள சிக் கல்களை ஆய்வு செய்வார் கள். மிக முக்கியமான பிரிவினருக்கு உதவுவதற்கான தேவைகள் குறித்தும் அவர் களை பொருளாதார ரீதி யில் முன்னேற்றுவது குறித் தும் ஆய்வு செய்வார்கள்.
இது தவிர, கட்டமைப் புத் திட்டங்கள், சிறு தொழில் பிரிவினருக்கான நிதியை பெருக்குவதற்கான வழிகளையும் இக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். இந்த அறிக் கையை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அரசு கோரும் பட்சத்தில் இடைக்கால அறிக்கையை யும் சமர்ப் பிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment