* பள்ளிப் பாடத் திட்டத்தில் கரோனா சேர்க்கப்பட உள்ளது.
* நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பூஜ்ஜியமாக இருக்கும் என்று ஆய்வு கூறுகின்றது.
* காசிக்குத் தரிசனத்துக்காக சென்ற திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் 15 பேர் காசியில் தவியா தவித்து ஊர் வந்து சேர்ந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். (யாத்திரையின் பலனோ பலன்!)
* மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.
* மது விற்பனையில் தமிழ்நாடுதான் முதலிடமாம்.
* கரோனா ஒழிப்பில், மாநில முதலமைச்சர்களுடன் கலந்தாலோசித்து அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் எல்லா அதிகாரத்தையும் பிரதமர் அலுவலகத்திலேயே குவிக்கக் கூடாது - ராகுல் காந்தி எம்.பி.
* டில்லியில் கோவில்கள் மற்றும் குருத்வாராக்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணியை மேற்கொள்கிறார் ஒரு முசுலிம் பெண் இம்ரானா சைபி.
* சென்னையில் 419 தெருக்கள் மூடப்பட்டன.
* சென்னையில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலம் கோடம்பாக்கம்.
* நிதி உதவி கோரிய 12 ஆயிரம் இளம் வழக்குரைஞர்களுக்கு ரூ.4,000 அளிக்கப்படும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.
* அமெரிக்க அதிபர் டிரம்பின் உதவியாளருக்குக் கரோனா தொற்று.
* இந்தியாவில் இராணுவத்துக்கான பட்ஜெட் ரூ.5.33 லட்சம் கோடி.
* தமிழ்நாட்டில் நாளை முதல் தேனீர்க் கடை திறப்பு (பார்சல் மட்டும்).
* திருமழிசையில் நாளை முதல் காய்கறி சந்தை தொடங்கும்.
* கேரளாவில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு.
* மலேசியாவில் விமானம்மூலம் தமிழ்நாட்டுக்கு வந்த 178 பேர் தனிமைப்படுத்துப்பட்டு உள்ளனர்.
* துபாயிலிருந்து இரு விமானங்கள்மூலம் 359 தமிழர்கள் வருகை - தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
* நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் நெல் 20 விழுக்காடு கூடுதல் விளைச்சல்.
No comments:
Post a Comment