கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கரோனா நிவாரண உதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 20, 2020

கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கரோனா நிவாரண உதவி


கோவை, மே 20  கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நேற்று (19.5.2020) மாலை 5 மணி அளவில் இரண்டாவது கட்டமாக அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய கரோனா நிவாரண உதவிகள் கழகக் குடும்பத்தினருக்கு மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் இல்லத்தில்  வழங்கப்பட்டது. பொருள்களை பெற்றுக் கொண்டவர்கள் மாவட்டக் கழகத்தின் மனிதநேய பணியை பாராட்டியதோடு, அதற்காக உழைத்த மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் ச.சிற்றரசு. மண்டல மகளிரணி செயலாளர் பா.கலைச்செல்வி, மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.பிரபாகரன், மண்டல மாணவர் கழகச் செயலாளர் மு.ராகுல், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் இராசி பிரபாகரன், காளிமுத்து, தமிழ்முரசு, இளைஞரணி வெற்றிசெல்வன், சக்தி பழனியப்பன், இலைக்கடை செல்வம், சுப்பையா, குரு, ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி, பெயிண்ட்டர் குமார், முத்துகணேசன், குறிஞ்சி ஆனந்த், பொள்ளாச்சி தோழர்கள் மாரிமுத்து, வீரமலை, நாகராஜ், ஆனந்தசாமி, மாணவர் கழகத் தோழர்கள் த.க.கவுதமன், நியூட்டன், தி.ச.யாழினி, தி.ச.கார்முகிழி, மகளிரணி திலகமணி, சுயமரியாதை திருமண நிலைய அமைப்பாளர் வ.ராஜேஸ்வரி, மகளிரணி சாந்தி, விமலா, சுகந்தி மற்றும் அ.மு.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment