* வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியை ஒட்டி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி புயலாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
* சென்னை கோயம்பேட்டில் உணவு தானிய சந்தை திறக்கக் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
* கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை அளிக்க மறுத்தால், சீனாமீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை டிரம்ப் எடுக்கவேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
* கரோனா காரணமாக அய்.நா.வின் தலைமை அலுவலகம் (நியூயார்க்) ஜூன் 30 வரை மூடப்படும்.
* தமிழ்நாட்டில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த வேண்டும் - நிபுணர் குழு பரிந்துரை.
* அடுத்த வாரம் முதல் கரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து கொடுத்து சோதிக்க முடிவு.
* கரோனா காரணமாக தொழிலை மேற்கொண்டு நடத்த முடியாத காரணத்தால் மதுரை அச்சகத் தொழிலதிபர் இளங்கோ என்பவர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை.
* இந்திய இளைஞர்கள் இராணுவத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் திட்டம் ஒன்றை இராணுவத் துறை தயாரித்து வருகிறது.
* வங்கிக் கடன் மோசடி புகழ் விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார் - இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
* தமிழக கரோனா கட்டுப்பாடு அறை தொலைப்பேசி எண்கள்: 044-29510400, 044-29510500, 9444340496.
* ஊரடங்கால் தமிழ்நாட்டுக்கு வருவாய் இழப்பு ரூ.97,000 கோடி.
No comments:
Post a Comment