நூல் அறிமுகம்  - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 16, 2020

நூல் அறிமுகம் 


தன்னம்பிக்கையின் நாயகன்


ஸ்டீஃபன் ஹாக்கிங்


எழுதியவர்:


ஏற்காடு இளங்கோ


வெளியீடு:


மங்கை வெளியீடு


விலை: ரூ.70;


பக்கங்கள்: 105


கிடைக்குமிடம்:


கௌரா ஏஜென்ஸீஸ்,


4ஏ/186, வி.ஆர். பிள்ளை தெரு, திருவல்லிக்கேணி,


சென்னை - 5.


இயற்பியல் அறிஞர் ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றிய சிறிய நூல். எளிய தமிழில் அரிய தகவல்களைக் கொண்ட நூல்.


ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் பிறப்பு, அவருடைய பள்ளி, கல்லூரி வாழ்க்கையையும் அவருடைய பிரபஞ்சம் குறித்த கண்டுபிடிப்புகளையும், அது குறித்து அவர் எழுதிய நூல்கள், அறிவியல் புனைக்கதை புத்தகங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி,  ஏராளமான செய்திகளை வழங்குகிறது.


ஹாக்கிங் தன்னுடைய முதுகலைப்பட்டத்தை படிக்கும் சமயத்தில், அவருக்கு ஏற்பட்ட நரம்பு மண்டல பாதிப்பு நோயான அமையோட்ரோவிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் என்ற நோயால் , உடல் இயங்காமல், மூளை மட்டுமே இயங்கக்கூடிய , இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மேல் உயிர் பிழைக்கமாட்டீர்கள் என்று மருத்துவர்கள் சொன்னாலும் கூட, அதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இந்த பிரபஞ்சத்தை பற்றிய ஆராய்ச்சிகளைச் சக்கர நாற்காலியில் உட்கார்ந்தவாறே எப்படிச் சாதித்தார் என்பதை விளக்கும் நூலே இது.


- அரியலூர் விஜய்


No comments:

Post a Comment