எப்படிப் போகிறது ஊரடங்கு காலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 16, 2020

எப்படிப் போகிறது ஊரடங்கு காலம்


 


செய்யமுடியாத வேலைகள் சிலவற்றை இப்போது செய்ய முடிந்திருக்கிறது. அதாவது, படிக்க வேண்டும் என்று எடுத்துவைத்த பெரிய நூல்கள் சிலவற்றை இப்போது படித்து முடிப்பதற்கு நேரம் கிடைத்திருக்கிறது. செய்ய முடிந்த சில பணிளை இப்போது செய்ய முடியா மலும் போயிருக்கிறது. அதாவது, நான் ஒரு பெரிய நூலை உருவாக்கும் பணியில் ஜனவரி மாதம் இறுதியில் ஈடுபட்டேன். அதற்காக சென்னை ஆவணக் காப்பகங் களிலிருந்தும், நூலகங்களிலிருந்தும் நிறைய குறிப்புகள் திரட்ட முடிவெடுத்தேன். ஆனால் வெளியிலேயே போக முடியாத சூழலில் அந்த வேலை தடைபட்டு நிற்கிறது. 


படிக்கும் புத்தகங்கள் எவை?


பழ.அதியமான் எழுதிய “வைக்கம் போராட்டம்”. ஆங்கிலத்தில் குலக்கல்வி பற்றிய வீரராகவன் எழுதிய “Half a day for a caste” படித்து முடித்தேன். பாதியில் படித்து நின்று போன


Bill Bryson எழுதிய, “A Short history of nearly Everything” என்ற ஆங்கிலப் புத்தகத்தை விட்ட இடத்திலிருந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.


 


- பேராசிரியர் சுப.வீரபாண்டியன்


பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை


No comments:

Post a Comment