தமிழர் தலைவர் இரங்கல்
மன்னார்குடி வட்டம் எடகீழையூரில் கிராம அதிகாரியாக இருந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ("மீசை") பாலகுரு அவர்களது வாழ்விணையர் திருமதி. நவமணி அவர்கள் (அவர் நீண்ட நாள் 'விடுதலை' சந்தாதாரர்) (வயது 92) மன்னையில் காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் மற்றும் தோழர்கள் மூலம் அறிந்து, கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், திருமதி. நவமணி அவர்களின் மூத்த மகன் தஞ்சை டாக்டர் பா. அழகரசன், மன்னை வழக்குரைஞர் பா. தமிழரசன் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்தார்.
தந்தை பெரியாரிடம், அன்னை மணியம்மையார் மற்றும் கழகத் தலைவர் ஆசிரியரிடம் மிகவும் அன்பும், பாசமும் கொண்டவர், சட்ட எரிப்பு வீரர் எடமேலையூர் சண்முகம் அவர்களது சகோதரியுமாவார் மறைந்த திருமதி. நவமணி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட கழகத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமையில் கழகப் பொறுப்பாளர்கள் இரங்கல் தெரிவித்து, ஆறுதல் கூறினார்கள்.
No comments:
Post a Comment