மன்னார்குடியில் நிவாரண உதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 14, 2020

மன்னார்குடியில் நிவாரண உதவி


மன்னார்குடி, மே 14 கரோனா ஊரடங்கால் வேலையின்றி சிரமப்படும் கழகத் தோழர்களுக்கு, தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி மன்னார்குடி கழக மாவட்டத்தின் சார்பில் மன்னார்குடி தந்தை பெரியார் படிப்பகத்தில் மனிதநேய உத விகள் வழங்கப்பட்டன. ரூ.2000 மதிப்புள்ள மளிகை, அரிசி, காய்கறிகள் அடங்கிய பைகள் கழகத் தோழர்கள் 24 குடும்பத் தினருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச் சியில் மாநில விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் இரா.கோபால் பைகளை வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த் தன், மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ். அன்பழகன், மாநில பகுத்தறிவு ஆசிரி யரணி அமைப்பாளர் சி.இரேமஷ், நீடா மங்கலம் ஒன்றியத் தலைவர் மா.பொன்னு சாமி, மன்னை நகரச் செயலாளர் மு.இராமதாஸ், நகர இளைஞரணித் தலைவர் மா.மணிகண்டன், பகுத்தறிவாளர் கழக நகரத் தலைவர் கோவி.அழகிரி, துணைச் செயலாளர் புட்பநாதன், நீடாமங்கலம் நகரத்தலைவர் பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட அமைப் பாளர் நா.இரவிச்சந்திரன், கோவில் வெண்ணி, க.சேகர், த.சரவணன், வெட்டிக் காடு வினோத், பழைய நீடாமங்கலம் சா.அய்யப்பன், இரா.அய்யப்பன், மன்னார் குடி ஒன்றிய அமைப்பாளர் இன்பக்கடல், தலைமைக்கழகப் பேச்சாளர் சிங்காரவேலு, மாவட்டத் துணைத் தலைவர் ஆர். சுதந்திரமணி, மன்னார்குடி வணங்காமுடி, இராயபுரம் ஆட்டோ மதி மற்றும் கழகத் தோழர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment