தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 14, 2020

தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன


தஞ்சை, மே  14 கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள திராவிடர் கழக தோழர்கள் மற்றும் பொது மக்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 06.05.2020 அன்று உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.


கலந்து கொண்டவர்கள்


இந்நிகழ்வில் கலந்து கொண்ட மானமிகுவா ளர்கள்: திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்அ.அருணகிரி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார், மாநில மாணவரணி அமைப்பாளர் செந்தூரப்பாண்டியன், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகரச் செயலாளர்சு.முருகேசன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு ராமலிங்கம், பூதலூர் ஒன்றிய தலைவர் அல்லூர் இரா.பாலு, திருவையாறு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் துரை.ஸ்டாலின், மண்டல இளைஞரணி செயலாளர் வே.ராஜவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பொன்னரசு,மண்டல மகளிரணி செயலாளர்அ.கலைச்செல்வி, தலைமைக்கழக சொற்பொழிவாளர் பூவை.புலிகேசி,கரந்தை பகுதி செயலாளர் டேவிட், ஒக்கநாடு மேலையூர் பெரியார் நகர் உத்திராபதி, மாநகர இளைஞரணி துணைச் செயலாளர் அ.பெரியார்செல்வம், மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டு வழங்கினர்.


திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு தஞ்சை இரா.ஜெயக்குமார் அவர்கள் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற இரண்டு நாட்களாக தஞ்சை மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர் களுடன் தொலைப்பேசி வழியாக தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்தார்.


இலவசமாக வழங்கப்பட்ட உணவு பொருட்கள்:


ளிளீ  ஆயில் -  1  லிட்டர்,  கோதுமை மாவு - 1 கிலோ,  உளுந்தம் பருப்பு -  500 கிராம், கடலை பருப்பு -  500 கிராம், பூண்டு  - 250 கிராம், புளி -  500 கிராம், மல்லித் தூள் - 500 கிராம், ரவா - 500 கிராம், பொட்டுக்கடலை -   250 கிராம், கொண்டைக்கடலை -   500 கிராம்.


இலவச பொருட்கள் வழங்குவதற்கு நன்கொடை கொடுத்து உதவிய மானமிகுவாளர்கள்:


 சி அமர்சிங் மாவட்ட தலைவர் - ரூ.5000,  மு.அய்யனார்மண்டல தலைவர் -  ரூ.2000,  திருச்சி மூர்த்தி திராவிடர் கழகம் - ரூ.2000,  சு. முருகேசன் மாநகரச் செயலாளர் -  ரூ.2000, ச.சித்தார்த்தன்மாநில கலைத் துறை செயலாளர்- ரூ.2000  மருத்துவர் தமிழ்மணி - ரூ.2000,  கண்ணன் திருவையாறு ஒன்றிய தலைவர் - ரூ.1000, துரை. ஸ்டாலின் திருவையாறு ஒன்றிய செயலாளர் - ரூ .1000, அதிரடி க.அன்பழகன் மாநிலகிராம பிரச்சார அமைப்பாளர் - ரூ.1000, தே.பொய்யாமொழி இயக்குனர் பெரியார் சமூகப் பணி, கை.மு.அறிவுச்செல்வன் ஒன்றிய ப.க.செய லாளர் - ரூ.1000, ந.காமராசு மாவட்ட ப.க. தலைவர் - ரூ.1000,  இரா.குண சேகரன் மாநில அமைப்பாளர் -  ரூ.1000, பாவலர் பொன்னரசுமாவட்டப.க. அமைப் பாளர் - ரூ.1000, வ. ஸ்டாலின் பொதுக்குழு உறுப்பினர் -  ரூ.1000, ஜெயராமன்துணை ஆட்சியர் (ஓய்வு) - ரூ.500, றிக்ஷிஸி. வீரமணி பகுத்தறிவாளர் கழகம் - ரூ.500 - மொத்த நன்கொடை வரவு - 25,000.


பொருட்களை பெற்றுக் கொண்ட பயணாளர்கள்: 


பூதலூர் ஒன்றியம்:  ஜெயச்சந்திரன் அக்கரைப் பேட்டை, குமார் திருக்காட்டு ப்பள்ளி, சிவகாமி முல்லைகுடி.


திருவையாறு ஒன்றியம்:  மோகன்ராஜ் கண்டியூர், மதுரகவி கண்டியூர், விவேகவிரும்பி திருவையாறு, பெரியார் அலிகண்டியூர்,  மலர்கொடி புகழேந்தி திருப்பழனம்.


தஞ்சாவூர் ஒன்றியம்:  தனபால்கரந்தை, ரமேஷ் சேப்பனாவாரி, செந்தில் கீழவஸ்தச்சாவடி, ஏகாம் பரம் ரெட்டிபாளையம்,  மாயன் ரெட்டி பாளையம், தேவா ரெட்டிபாளையம், முனியப்பன் மாத்தூர், பாரதிதேவா சூரக்கோட்டை,  பிரகாஷ் தாழம்பட்டி , ஆசிட் தியாகராஜன்.


உரத்த நாடு ஒன்றியம்:  மாதவன் ஆயங்குடி, தாமரைசெல்வன் ஆயங்குடி, கதிரவன் ஆயங்குடி, மெய்யழகன் வெள்ளூர், கவுதமன் ஒக்கநாடு கீழையூர், அஞ்சம்மாள் ஒக்கநாடு கீழையூர், கோவிந் தன் சடையார் கோவில், சக்திவேல் உரத்தநாடு,  கணேசன் குலமங்கலம்.


No comments:

Post a Comment