காணொலி மூலம் நடைபெற்ற தாராபுரம் மாவட்டக் கலந்துறவாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 14, 2020

காணொலி மூலம் நடைபெற்ற தாராபுரம் மாவட்டக் கலந்துறவாடல் கூட்டம்

மதவாதத்தை வீழ்த்தும் மாற்றுத் தத்துவம் பெரியார்


கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை



தாராபுரம், மே.14, தாராபுரம் கழக மாவட்டக் காணொலிக் கலந்துறவாடல் கூட்டம் 4.5.2020 அன்று மாலை 5 மணிக்குத் தொடங்கி 7 மணி வரை நடை பெற்றது.


கூட்டத்தில், மாவட்டத் தொழிலாளரணி அமைப்பாளர் சிவகுமார் வரவேற்றார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் த.சண்முகம், மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன், மாவட்டத் செயலாளர் தாராபுரம் த.சண்முகம், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் ஆகியோர் முன்னிலை வகித்து, கரோனா காலத்தில் தாங்கள் செய்து வரும் பணிகள் குறித்தும், இயக்கத் தோழர்களோடு அடிக்கடி உரையாடி அவர்களின் தேவைகள் குறித்து அறிந்துவருவதாகவும் பேசினர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றினார்.


கவிஞர் கலி.பூங்குன்றன் உரை


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள், கழக வழக்குரைஞரணி மற்றும் இளைஞரணி உள்ளிட்ட 9 கூட்டங்களில் காணொலி வாயிலாகப் பேசி, அவர்களுக்கு உற்சாகமூட்டி வருகிறார்.


இந்நிலையில், நமது தோழர்கள் பல மாவட்டங் களில் கலந்துறவாடல் கூட்டங்களை நடத்தி வரு கின்றனர். இந்த நேரத்தில், வாழ்வியல் முறைகளை நாம் சிக்கனமாகக் கையாள வேண்டும். தேவைக்கு ஏற்பச் செலவு செய்வதை வாழ்வியல் முறையாகக் கையாள வேண்டும்.


கரோனாவின் கோரத்தாண்டவத்திலிருந்து நாம் மீள ஆசிரியர் வழிகாட்டுதல்களை படிக்க வேண் டும். நம் இயக்கத்தைப் பொறுத்தளவில் பிரச்சாரம், போராட்டம் என்பது கடிகாரத்தின் பெண்டுலம் போன்றதாகும். நாம் அரசியல் பக்கம் செல்லாமல், அரசியலில் யார் வர வேண்டும் என்பதைத் தீர்மானிக் கிறோம்.


வடமாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றபோது பெரியார், அம்பேத்கர் படங்களை கையில் ஏந்திப் போராடி வருகின்றனர். நாடாளு மன்றத்தில் 'பெரியார் வாழ்க' எனும் முழக்கங்கள் வானைப் பிளக்கின்றன. திருப்பூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டபோது நெற்றி யில் திருநீறு அணிந்தவர்கள் முன் வரிசையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது, அவர்களிடம் கேட்டதற்கு, பெரியாரால் தான் நாங்கள் வாழ்கிறோம் எனத் தெரிவித்தனர்.


இந்துத்துவாவைப் பலர் எதிர்த்தாலும், இந்துத் துவத் தத்துவத்தை சித்தாந்த ரீதியாக எதிர்க்க பெரியார் கொள்கைகள் ஆயுதமாகக கையாளப்படு கின்றன. இவ்வாறு பெரியார் இன்று உலகத் தலைவ ராகப் பரிணமித்திருக்கிறார். இதற்கு காரணம் தந்தை பெரியாரை உலகமயப்படுத்தி வருகின்ற நம் முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தான் எனப்பேசினார்.


பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்


கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் உரையாற்றும் போது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரைப்படி  அனைத்து மாவட்டங் களிலும் காணொலி வாயிலாக கலந்துறவாடல் கூட்டம் நடைபெற்று வருகிறது.


இக்கட்டான இந்தக் காலகட்டத்தில்கூட ஆசிரியர் அவர்களின் முயற்சியினால் விடுதலை நாளேடு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலமாக தொடர்ந்து வருகிறது. இவ்வாறு வாட்ஸ் அப்பில் வரும் விடுதலை நாளிதழை படித்து 500 பேருக்கு மேல் பகிர்ந்து வருவதாகக் கூறினார்.


உலகப் புத்தக நாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 50 சதவிகிதக் கழிவில் புத்தகங்கள் வழங்கப்படும். 100 முதல் 1500 வரையிலான தொகுப்புகளை பதிவு செய்தால் மட்டும் போது, ஊரடங்கு முடிந்த பின்னர் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரி வித்தார். இதன்படி, இயக் கத்தைச் சாராத பலரும் புத் தகங்களைப் பெற பதிவு செய்துள்ளனர்.


ஊரடங்குக் காலத்திலும் கூட உலகப் புத்தக நாளை முன்னிட்டு, புத்தக விற்பனையை நடத்தி கழகம் முன்மாதிரியாகத் திகழ் கிறது என்றார்.


மேலும், கோயில்கள் முதலிய வழி பாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ள தையும், கோயில்களுக்குச் செல்லா மலேயே மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதன்மூலம் தந்தை பெரி யாரின் கொள்கை நிலை நாட்டப்பட்டுள்ளது. இதேபோல், திருமணத்தில் 50 பேருக்கு மேல் கூடுவதைக் கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்றார் பெரியார். ஆனால், இன்று அரசாங்கமோ 20 பேர் தான் கூட வேண்டும் எனவும், அதற்கு மேல் கூடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது இதன்மூலம் பெரியாரின் கருத்துதான நிலையானது என்பது நிரூபணமாகியுள்ளது எனத் தெரிவித்தார்.


நிகழ்ச்சியில், பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர் முருகேசன், மடத்துக்குளம் ஒன்றியச் செய லாளர் தங்கவேல், மாவட்ட அமைப்பாளர் மயில் சாமி, துங்காவி பகுதி அமைப்பாளர் வெங்கடாச் சலம், மாவட்ட இளைஞரணித் தலைவர் மாயவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தென்றல், கொமருலிங்கம் நகர அமைப்பாளர் மாரிமுத்து  உள்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர். இணைய வழி ஒருங்கிணைப்பை திருச்சி வி.சி.வில்வம் மேற் கொண்டார்.


No comments:

Post a Comment