தாராபுரம் கழக மாவட்டம் வெள்ள கோவில் ஒன்றியத் தலைவர் முத்தூர் சு.சிதம்பரம் (வயது 58) உடல்நலக்குறைவு காரணமாக 13.5.2020 புதன்கிழமை மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். 13.05.2020 அன்றே இறுதி நிகழ்வுகள் நடைபெற்று இரவு 11 மணியளவில் சு.சிதம்பரம் அவர்களது உடல் முத்தூர் பாரவலசு வரபருத்திக்காட்டு தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தனர்.
- - - - -
கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் காவேரிப்பட்டணம் வே. புகழேந்தி அவர்களின் வாழ்விணையர் செவிலியர் குமுதா மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மருத்துவமனையிலிருந்து பணிமுடித்து இருசக்கர வாகனத்தில் திரும் புகையில் விபத்துக்குள்ளானார். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று (15.5. 2020) மாலை மறைவெய்தினார். கழகப் பொறுப்பாளர்கள் இறுதிமரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment