பாரம்பரியமான நம்பிக்கையும் இன்றைய அறிவியலும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 18, 2020

பாரம்பரியமான நம்பிக்கையும் இன்றைய அறிவியலும்

கங்கா ஜலம் கரோனாவை தீர்க்குமா?


டி. பாலசுப்ரமணியம்



(பாரம்பரியமும், இன்றைய அறிவியலும் சந்தித்து ஒன்றுடன் ஒன்று இவ்வாறுதான் இணைகின்றன. Ayushசினால் கோவிட்-19 நோய்க்கிருமியை எதிர்த்துப்போராட இயலும். ஆனால் கங்கை நீரால் அந்த நோய்க்கிருமியை எடுத்துக் கொண்டு சென்று பல இடங்களிலும் பரப்புவதற்கு மட்டுமே முடியும்.)


கோவிட்-19 நோய்க்கிருமி தொற்றை கங்கை நதி நீரைப் பயன்படுத்தி குணப்படுத்துவதற்கான ஓர் ஆய்வை மேற்கொள்ளும்படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை, கங்கை நதியைத் தூய்மைப் படுத்தும் தேசிய செயல்திட்டத்திற்குப் பொறுப்பான மத்திய அமைச்சர், பதினைந்து நாட்களுக்கு முன்னர் கேட்டுக் கொண்டார். இது பற்றிய சோதனைச் சாலை பரிசோதனைகளைத் துவக்குவதற்குப் போதுமான பலமான புள்ளி விவரங்கள் இல்லை என்பதை சுட்டிக் காட்டிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைச்சரின் வேண்டுகோளை நாகரிகமாகவும் மென் மையாகவும் மறுத்துவிட்டது.


உலகம் முழுவதிலும் உள்ள நதிகள் அனைத்தையும் விட மிகமிகப் புனிதம் வாய்ந்த நதியாக கோடிக்கணக் கான மக்களால்  கங்கை நதி கருதப்படுகிறது. இமய மலையில் 3.9 கி.மீ. அல்லது 13,000 அடிஉயரத்தில் உள்ள  கவுமுகி கங்கைப் பனிப் படலத்தில் இருந்து துவங்கி வழியில் பல சிற்றாறுகளிலும், ஓடைகளிலும் இருந்து சேர்ந்த நீரை தன்னுள் ஏற்றுக் கொண்டு, உத்தரகண்ட் மாநிலம் ஹரிதுவாரத்துக்கு அருகில் இருக்கும் தேவபிரயாக் என்ற இடத்தில் கங்கை நதியாக உருவெடுத்துப் பாய்கிறது. வங்காள விரிகுடாக் கடலில் சென்று சங்கமிக்கும் முன்னர் அது 5,255 கி.மீ. தூரம் பயணம் செய்து, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய வடஇந்திய மாநிலங்களின் சமவெளிகளிலும், நதிப் படுகைகளிலும் பாய்ந்து செல்கிறது. பெரும்பாலான இந்து மக்களும், மற்ற மத மக்கள் சிலரும் கூட, இந்த நதி பாய்ந்து சென்ற இடங்களில் எல்லாம் அதனை வழிபட்டு, அதில் குளித்து,  அதன் நீரை பூஜை செய்வதற்காகவும், மற்ற செயல்பாடுகளுக்காகவும் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். (அயல் நாடுகளில் கங்கை நீர் விற்கவும் செய்யப்படுகிறது. கலிபோர்னியாவில் இருக்கும் இந்தியர்களின் கடைகளில் விற்கப்படுவதை நான் கண்டேன்.) அத்தகைய பக்தியையும், மரியாதை யையும் மக்கள் கங்கை  மாதாவின் மேல் வைத்து உள்ளனர்.


புனிதத் தன்மையும் இழிவுடுத்தலும்


பெரும்பாலும் மனிதக் கழிவுகளாலும், வணிக நோக்கத்துடனும் கங்கை நதி நீர் பல நூற்றாண்டு காலமாக மாசுபடுத்தப்படுவது ஹரிதுவார் பகுதியி லேயே தொடங்கிவிடுகிறது என்பது மிகமிக வருந்தத் தக்க உண்மையாகும். இந்தியாவில் ஹரிதுவர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இடங்களில் உள்ள கங்கை நதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி மதிப்பீடு செய்வதற்கான, தண்ணீரின் தரம் பற்றிய புள்ளிவிவரங்கள் என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை ஆர். புடானியாவும் அவரது சகாக்களும், தண்ணீர் பயன்பாட்டு அறிவியல் என்ற 6, 107-118 (2016) பத்திரிகையில் வெளியிட்டனர். <link.springer.com/content/pdf>10.1007/s13201 04-0206-6.pdf  என்ற அந்தக் கட்டுரையை படித்துப் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கவில்லை.


கங்கை நதிநீரில் ஏற்பட்டுள்ள மாசு பற்றி அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகள் <nytimes.com.2019 /12/23/health/ganges/drug resistant/bacteria /html>  என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸ் டிசம்பர் 23 2019 இதழில் வெளியிடப்பட்டுள்ளன. கங்கை நதி சுற்றுச்சூழல் மாசு அடைந்துள்ளது பற்றி டில்லி IIT இல் ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்தி வரும் பகுத்தாய்வினை இந்த ஆய்வுக் கட்டுரை சுருக்கித் தருகிறது. கங்கை நதி சுற்றுச் சூழல் அடைந் துள்ள மாசின் அளவு, தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நோய் எதிர்ப்பு மருந்தினால் பாதிக்கப்படாமல் கங்கை நீரில் தற்போதுள்ள ஆபத்து மிகுந்த நோய்க் கிருமிகள் தொடர்ந்து உயிர்வாழ்ந்து வருவது பற்றிய பகுத்தாய்வினையும் இக்கட்டுரை தெரிவிக்கிறது. வேறு சொற்களில் கூறுவதானால், கங்கை நதி இந்தியா நாட்டில் எந்த இடத்தில் இருந்து பாயத் தொடங்கு கிறதோ, அந்த இடத்தில் இருந்தே அது பாய்ந்து செல்லும் வழிகளில் எல்லாம் மக்கள் மற்றும் இதர உயி ரினங்களுக்கு அதிக அளவிலான தீங்களிப்பதாகவே இருக்கிறது என்று கூறலாம். கங்கை நதிநீர் கீழ் பகுதி யில் பாய்ந்து வரும்போது,  தொழிற்சாலைகளில் இருந்து தொழிற்கழிவுகள் கங்கை நதியில் கொட்டப் படுவதன் காரணமாக, ஆற்று நீரின் தரமும் அதன் பாதுகாப்புத் தன்மையும் மேலும் மேலும் மோசமடை கிறது. கரோனா நோய் பரவுதலை தவிர்ப்பதற்காக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு காரண மாக கங்கை நீரின் தரம் 40 முதல் 50 சதவிகிதம் வரை மேம்பட்டிருக்கிறது (இந்தியா டுடே, ஏப்ரல் 6,2020) என்று  புனிதம் நிறைந்த காசி நகரில் இருந்து அண்மை யில் வெளி வந்த அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.


இந்த அளவுக்கு கங்கை நதி நீர் தூய்மையற்றதாக ஆக்கப்படுவதை எவ்வாறு நாம் அனுமதித்தோம்? கங்கை நீரைப் பயன்படுத்தும் மக்களில் ஒரு பெரு மளவு எண்ணிக்கையிலானவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் என்பது நிச்சயமானது. பல்வேறுபட்ட தொழில் குழுமங்களின் தலைவர்கள் பலரும் கூட இன்னமும் கங்கையைப் புனிதமானதாகக் கருதுவது டன், அவ்வப்போது கங்கை நீரைக் கொண்டு பூஜை களும் செய்து வந்திருக்கிறார்கள் என்ற போதிலும், அவர்களும் சேர்ந்து கொண்டுதான் கங்கை நதியை இது போல மாசுபடுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவிட முடியாது; உலக அளவிலான தங்களது கவலைகளை வெளிப்படுத்துபவர்களாகவே இருப்பவர்கள்  அவர் கள். இதில் நல்லது-கெட்டது அல்லது கடவுள்-சாத் தான் என்ற பாகுபாடுகள் எதுவும் இல்லை. இதில் எனக்கு என்ன லாபம் இருக்கிறது என்ற மனோ நிலையே எங்கும் பரவி நிற்பதாகும். இது ஒழுக்க நெறிக் கோட்பாட்டின்படி தவறானதாகவும் இருக்கக் கூடும். இப்போது நிலவும் உண்மைகளை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது,  கங்கை மாதாவுக்கு ஒரு பாதுகாப்பான, தூய்மையான எதிர்காலமே இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.


டால்பின்கள், கரியால்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது.


இந்த அளவுக்கு நஞ்சு மிகுந்த நோய்க்கிருமிகளும், மனிதர் மற்றும் இதர உயிரினங்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் வேதியியில் தொழிற்சாலைக் கழிவுக ளும் கங்கையில் கலப்பதை அறிவியல் கண்ணோட்டம் கொண்டு பார்க்கும்போது, 140 வகையிலான மீன் இனங்கள், நிலத்திலும் நீரிலும் வாழ இயன்ற 90 வகையான ஆமை, முதலை போன்ற உயிரினங்கள், புகழ் பெற்ற கங்கை ஆற்று டால்பின்கள், மீன்களை உண்ணும்  கரியால்ஸ் என்னும் முதலைகள் எவ்வாறு இந்த அளவுக்கு சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்து கங்கை நதிநீர் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியி ருக்கும் நிலையில், குறிப்பாக கோவிட்-19 நோய்க் கிரு மிகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிர் வாழ்ந்து வந்திருக்கின்றன என்பதை எண்ணிப் பார்ப்பதே மிகுந்த வியப்பளிப்பதாக உள்ளது.  சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தியை அவை பெற்றிருக்கின்றனவா? அது போன்ற தொற்றுநோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போராட இயன்ற நோய் எதிர்ப்பு சக்திகளை அவை உருவாக்கிக் கொண்டனவா?  கரோனா தொற்று நோய்க் கிருமிகளுக்கு எதிரான பாதுகாப்பினை மனி தர்களுக்கு உருவாக்கி தக்க வைத்துக் கொள்வதற்காக, மிக்க கவனத்துடனும், அக்கறையுடனும் ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட வேண்டிய தேவை உள்ள ஒரு பிரச்சினை இது.


இலாமாக்கள், ஒட்டகங்கள், திமிங்கிலங்கள் போன்ற அசாதாரணமான உயிரினங்கள் மீது மேற் கொள்ளப்பட்ட அண்மைக் கால நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய ஆராய்ச்சிகள் சில வியப்பளிக்கும் செய்திகளை தெரிவிப்பவையாக உள்ளன. 2020 மே 1 அன்றைய அறிவியல் (சயின்ஸ்) பத்திரிகையில் மிச் லெஸ்லி என்பவர் "இலாமாவின் ரத்தம் மற்றும் ஒரு பொருளை உருவாக்கும் சிறிய அணுத்திரள் குழுக்களை எளிதில் பிரிந்து செல்ல இயலாதபடி ஒட்டவைக்கும் பசை" என்று தனது கட்டுரையில் எழுதியுள்ளார். இலாமாக்கள், ஒட்டகங்கள், திமிங்கிலங்கள், தங்கள் உடலில் இருந்து  மிகச் சிறிய நோய் எதிர்ப்பு ஆற்றல்   மிகுந்த செல் உயிரினங்களை, சாதாரணமாக அவை இருக்கும் உருவ அளவில் பாதி அளவு மட்டுமே உள்ளபடி,  பம்ப செய்து வெளியேற்றுவதைக் காண முடிந்தது. இதிலி லிருந்து நமக்குக் கிடைக்கும் முக்கியமான செய்தி என்னவென்றால்,  இத்தகைய விலங்குகள், மிகமிகச் சிறிய அளவிலான நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்ட உயிரினங்களை, உயிரின ஆய்வு பரிசோதனை சாலைகளில் எளிதில் உருவாக்கி, நோய்க் கிருமிகள் தொற்றினை முறியடிப்பதற்கான ஆயுதங்களாகப் பயன்படுத்த இயலும் என்பதுதான். இதனை எவ்வாறு செய்ய முடியும் என்பது பற்றிய ஒரு விரிவான கட்டுரை செல் cell (https://dol.org/10.1016/j.cell.2020-04-03 என்ற பத்திரிகையில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. டால்பினின் நோய் எதிர்ப்பு ஆற்றல் :  மத்திய தரைக் கடல் மற்றும் அட்லாண்டிக் கடற்கரைப்  பகுதியில் காணப்படும் டால்பின் நோய் எதிர்ப்பு ஆற்றல்: <https://dol.org/10.13389.2019,99888>  பற்றிய ஓர் ஆய்வின் மூலம் c/Centellege and coworkers  என்ற கட்டுரையில் டால்பின் நோய் எதிர்ப்பு ஆற்றல் பற்றி கூறப்பட்டுள்ளது மிகுந்த பொருத்தமுடையதாக இருக்கிறது.  மத்தியதரைக்கடல் பகுதி கடல்நீர்  மிகமிக அதிக அளவில் சுற்றுச் சூழல் மாசுபட்டுள்ள நிலையில், கேனரி தீவுகளில் உள்ள நீர் அதை விட தூய்மையானதாக உள்ளது.


இந்த ஆய்வுகளில் இருந்து நம்மால் ஒரு பாடம் கற்றுக் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். கங்கை நீரில் உள்ள கரியால்களும், டால்பின்களும்  தங்களது மிகமிகச் சிறிய நோய் எதிர்ப்பு உருவங்களை அடையாளம் காட்டிக் கொள்வதனால்,  அவைகளை பரிசோதனைச் சாலைகளில் தன்மயமாக்கி மனிதர்களைத் தாக்கும் கோவிட்-19 நோய்கிருமிகளுக்கு எதிராகப் பயன்படுத்த இயலும். அய்தராபாதில் உள்ள தேசிய விலங்கியல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் DBT பரிசோதனை சாலை இத்தகைய ஆய்வினை மேற்கொள்வதற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.


இந்த இரு முடிச்சுகள் சந்திக்கும் இடம்


மேற்குறிப்பிடப்பட்ட அமைச்சரின் கோரிக்கைக்கு நேர் எதிராக ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், உனாணி, சித்தா மற்றும் ஹோமிபோபதி ஆகியவை அடங்கிய ஆயுஷ் துறைக்கு (AYUSH) பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர், கோவிட் 19 நோய்த் தொற்றுக்கு எதிராக மனிதரின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்ய இயன்ற ஆயுஷ் 64 என அழைக்கப்படும் பல மூலிகைகள் கொண்ட மருந்து கலவையான அஷ்வகந்தா, யாஷ்டிமது, ஜிலோய் கலவையை கோவிட்-19 கிருமி தொற்றுக்கு எதிராக பயன் நிறைந்த வகையில் பயன்படுத்துவது பற்றிய ஓர் ஆராய்ச்சியை சோதனைச் சாலையில் மேற்கொள் வதற்கான ஒரு கோரிக்கையை ஆயுஷ் துறை அமைச் சர்  முன் வைக்கலாம்.


நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் பாராம் பரியமான மூலிகைச் செடிகள் மற்றும் தாவரங்களின்  மூலக் கூறுகளில் அமைந்துள்ளன என்பதை மெய்ப் பிப்பதற்கான போதுமான ஆதாரங்கள் இருந்ததால்,  செயல்பட இயன்ற அதன் மூலக் கூறுகள் கண்டுபிடிக் கப்பட்டு, தன்மயமாக்கப்பட்டு, மருந்து நிறுவனங்களால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது என்பதால், கோவிட்-19 கிருமி தொற்றுக்கு எதிராக பய இது போன்றதொரு பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும். இன்றைய அறிவியல் நடைமுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு,  பாரம்பரியமான இந்த மருந்துக் கலவை களின் பயன்களை மதிப்பீடு செய்வதற்காக, ஆயுர் வேத மருத்துவர்கள்,  வேதியியல்-உயிரியல் ஆய் வாளர்கள், செல் உயிரியல் ஆய்வாளர்கள், மரபணுயியலாளர்கள் மற்றும் நானோ தொழில்நுட்ப வல்லு நர்கள் ஆகியவர்களுடன் இணைந்து கடந்த 20 ஆண்டு காலமாக செயலாற்றி வரும் பல்துறை வல்லு நர் எம்.எஸ். வல்லதன் இணைந்து செயல்பட்டு வருகிறார். 2016 மார்ச்  1  நடைபெற்ற இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் 82 இதழில் வெளியிடப்பட்ட  "ஆயுர்வேத உயிரியல்- முதல் பத்தாண்டுகால ஆயுர் வேத உயிரியல்" என்ற அவரது பதக்க உரையைப் படிப்பது மிகுந்த பயனை அளிக்கும். இன்றைய அறிவியலைப் பயன்படுத்திக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பல ஆயுர்வேத சோதனைகளைப் பற்றியும், அவற்றினால் உறுதிப்படுத்தப்பட்ட விளைவுகள் பற்றியும்  அவர் அந்த உரையில் குறிப்பிட்டுள்ளார். கணினி இணைய தளத்தில் இதனை இலவசமாகப் படிக்கலாம். டுரோசோபிலா மெடனோகாஸ்கர் மாதிரி யில் பாரம்பரியமான ஆயுர்வேத மருந்துக் கலவை களின் ஒட்டு மொத்த பயன் பாடுகள், V. Dwivedi et al., PLoS One (2012); 7 (5):23711<doi:10-1371/journal.pone.0037113>


பாரம்பரியமும், இன்றைய அறிவியலும் சந்தித்து ஒன்றுடன் ஒன்று இவ்வாறுதான் இணைகின்றன. AYUSHனால் கோவிட்-19 நோய்க்கிருமியை எதிர்த் துப்போராட இயலும். ஆனால் கங்கை நீரால் அந்த நோய்க்கிருமியை எடுத்துக் கொண்டு சென்று பல இடங்களிலும் பரப்புவதற்கு மட்டுமே முடியும்.


நன்றி: 'தி இந்து',17-05- 2019


தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.


No comments:

Post a Comment