ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 18, 2020

ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னை, மே 18 கரோனா  தொற்றுநோய்  உணவு மற்றும் சுகாதார அமைப்புகளின் பலவீனத்தை அம்பலப் படுத்தி யுள் ளது. அரசு, வணிக நிறுவனங்கள். சமூகம் ஆகியவை ஊட்டச்சத்துக் குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய எல்லா வழிகளிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று சர்வதேச ஊட்டச்சத்து அறிக்கை வலியுறுத்தி உள்ளது.


உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டில் உள்நாட்டு ஏற்றத்தாழ்வுகளின் மிக உயரிய விகிதங்களைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தியா ஊட்டச்சத்துக் குறை பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. 


 கோவிட் -19 தொற்றுநோய் பல மடங்கு சவால்களை பெரிது படுத்தியிருக்கும் நேரத்தில் எங்கள் இலக்குகளை அடைய எங்களுக்கு இன்றும் அதிக உறுதியும் அர்ப்பணிப்பும் தேவை. ஊட்டச்சத்து குறைபாடு நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது இதனால் நோய்த்தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளது மேலும் தொற்றுநோயின் சமூக-பொருளாதார தாக்கம் உலகள வில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை அதி கரிக்கலாம் என உலக ளாவிய ஊட்டச்சத்து அறிக்கை இணையதள வெளியீட்டில் பேசிய நிதி ஆயோக் சிறப்பு ஆலோசகர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment