டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:
- லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு நடந்தே கூட செல்லும் அவல நிலையில், சிறப்பு ரயில்கள் இயக்குவதை முறைப்படுத்திட மத்திய உள்துறை அமைச்சகம், ரயில்வே துறை மற்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி யுள்ளது.
- நூற்றுக்கணக்கான டன் உணவு தானியங்கள் வீணடிக்கப் படுவதாக வந்த செய்திகளின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்பி உள்ளது.
- ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தன் மீது மும்பை காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கினை மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றிடக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மகாராட்டிராவில் பால்கார் கிராமத் தில் மூன்று பேர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை, மதரீதியாக நடைபெற்றதாகவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திமீதும் தவறான தகவலை ஒளிபரப்பியதாக அர்னாப் கோஸ்வாமி மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- இந்த ஆண்டு நவம்பரில் பீகார் மாநிலத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அம்மாநில பாஜக, தற்போது கரோனா தொற்று பிரச்சினை இருக்கும் சமயத்திலேயே, தனது தேர்தல் பணிகளை துவக்கி உள்ளது.
- கரோனா தொற்றின் காரணமாக அனைத்துத்தரப்பு மக்களும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவியே உடனடி தேவை என்பதை மத்திய நிதி அமைச்சர் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை; 1930இ-ல் இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் ஏற்பட்ட மிகப்பெரியப் பொருளாதார வீழ்ச்சிக் குப் பிறகு தற்போது கரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ளது என்பதை பத்திரிக்கையின் தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
- தற்போது மத்திய அரசு கொண்டு வரும் மின்சார மசோதா, தனியாருக்கு வாய்ப்பு அளிக்கவும், மின் கட்டணம் உயரவும் வழிவகுக்கும்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு:
- கரோனா வைரஸ் காரணமாக மகாராஷ்டிரா, தமிழ் நாடு, குஜராத், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, உள் நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) 60 விழுக்காடு என கிரிசல் ஆய்வு மய்யம் தெரிவிக்கிறது.
- ஆர்.எஸ்.எஸ். உள் அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் எனும் வணிக அமைப்பு, சிறு, குறு தொழில் மீட்புக்கான பிரச்சாரத் தில் நாடு முழுவதும் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
- நாட்டின் வேலைவாய்ப்பு இழப்பு குறித்த தகவல்களை அளித்திட அனைத்து அமைச்சகத்திற்கும் பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தல். சி.எம்.அய்.இ. என்ற அமைப்பு எடுத்த ஆய்வின்படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20 வயது முதல் 30 வயதுவரை உள்ள இளைஞர்கள் 2.70 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இது மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ், புதுடில்லி பதிப்பு:
- இடது சாரி என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பது என்ற தலைப்பில் இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது. கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் கம்யூனிசம் குறித்து வெளியிட்ட கட்டுரைக்கு மறுப்பாக இந்த கட்டுரை.
- காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமான சட்டிஸ்கரில், விவசாயிகளுக்கு நிதி உதவி அளித்திடும் நியாய் திட்டம் அறிமுகம். 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி அளித்திட்ட தேர்தல் வாக்குறுதியில் நியாய் திட்டம் சொல்லப்பட்டது.
- தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த 20 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் பீகார் மாநிலம் வருவதை அரசு உறுதி செய்துள்ளது.
- கரோனா தொற்று மகாராட்டிராவில் குறிப்பாக தாராவி பகுதியில் அதிகமானதையொட்டி, ஆயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளிகள் அப்பகுதியில் இருந்து வெளியேறி தங்கள் ஊருக்கு செல்லத் துவங்கியுள்ளனர்.
தி இந்து, சென்னை பதிப்பு:
- மத்திய அரசு அவசரம் அவசரமாக நிறைவேற்றிய ஜம்மு காஷ்மீர் குடியுரிமை சட்டத்தைத் தொடர்ந்து அம்மாநில குடி யேற்றம் குறித்த சட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. இது அம்மாநிலத்தின் மக்கள்தொகையை பாதிக்கும் எனக் கூறி, ஆட்சியில் இருந்த இரு பெரும் கட்சிகளான, பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மெகபூபா முக்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது..
- குடந்தை கருணா,
20.5.2020
No comments:
Post a Comment