குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 20, 2020

குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க வலியுறுத்தல்


கோவை, மே 20- சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு 6 சதவீதம் வட்டியில் கடனுதவி வழங்க வேண்டும் என்று கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில்முனைவோர் (காட்மா) சங்கம் வலியுறுத்தி யுள்ளது.


மத்திய அரசால் அறிவிக் கப்பட்ட கடன் அறிவிப்புகள் தொழில்முனைவோரை சரியான முறையில் சென்ற டைவதை கண்காணிக்கவும், குறைகளை சரி செய்யவும் ஆட்சியர் தலைமையில், வங்கி, மாவட்ட தொழில் மய்யம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அதி காரிகள், தொழில் அமைப்பு களின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைத்து, மாதந் தோறும் குறைதீர் முகாம் நடத்த வேண்டும்.


மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ள கடனுதவி களை 6 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்க வேண்டும். ஏற்கெனவே பெறப்பட்டுள்ள கடன்களுக்கு 6 மாத வட் டியை தள்ளுபடி செய்யவேண் டும். ராணுவம் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்க ளில் 70 சதவீதத்தை குறுந் தொழில் நிறுவனங்களிடமி ருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.


மூலப்பொருட்களின் விலை யேற்றத்தை தடுத்து, தடையின்றிக் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தீர்மா னங்கள் இச்சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


No comments:

Post a Comment