கரோனாவுக்கு தடுப்பு மருந்து முதல் முறையாக மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 20, 2020

கரோனாவுக்கு தடுப்பு மருந்து முதல் முறையாக மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி

வாசிங்டன், மே 20- அமெரிக்கா வில் கொரோனா தடுப்பு மருந்தை முதல் முறையாக மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்ததில் அது வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அளித்து சாத கமான பலன் கிடைத்துள்ள தாக அதனை தயாரித்த ‘மாடர்னா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.


கரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் 30க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள் ளன. நூற்றுக்கணக்கான தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு நோயாளிக ளிடமும், தன்னார்வலர்களிட மும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ’மாடர்னா’ மருந்து தயாரிப்பு நிறுவனம் அது கண்டுபிடித்த கரோனா தடுப்பு மருந்தை ஆரோக்கியத்துடன் உள்ள 8 தன்னார்வலர்களுக்கு கொடுத்து கடந்த மார்ச் முதல் பரிசோதித்து வந்தது.


இதில் தடுப்பு மருந்தை பயன்படுத்தியவர்களின் உடல் நலனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதால், சாதகமான முடிவு கிடைத் துள்ளதாக மருத்துவ நிபுணர் கள் தெரிவித்தனர். முதல் கட்டமாக 8 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு இரண்டாவது கட்டத்தில் 600 தன்னார்வலர்களிடம் நடத்தப்பட உள்ளது. வரும் ஜூலை மாதம் 3ஆவது கட்டமாக ஆயிரம் பேரிடம் நடத்தப்பட இருக்கிறது. இதனிடையே, அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், தனக்கு கரோனா அறிகுறி இல்லை எனினும், கடந்த ஒன்றரை வாரமாக தினமும் ஹைட்ராக்சி குளோரோ குயின்,  ஜின்க் மருந்துகளை உட்கொள்வதாக தெரிவித்து உள்ளார்.


No comments:

Post a Comment