கோவிட் 19 வைரஸ் காரணமாக இளநிலைபட்டப் படிப்பு சேர்க்கையில் மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 20, 2020

கோவிட் 19 வைரஸ் காரணமாக இளநிலைபட்டப் படிப்பு சேர்க்கையில் மாற்றம்

சென்னை, மே 20- கோவிட் 19 நோய்த் தொற்று காரணமாக இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகளில் திருத்தங்களை சிவ நாடார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்தப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை செயற்கை நுண்ணறிவு அமைப்பு மற்றும் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கான கண்காணிப்பு கொண்டு நடத்தவுள்ளது. 


பட்டப் படிப்பு சேர்க்கையில் எஸ்ஏடி தேர்வில் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண்கள் ஏற்றுக் கொள்ளப்படும். பொறியியல் அல்லது இயற்கை அறிவியல் சார்ந்த படிப்புகளை படிக்க விரும்பிவோர் ஜேஇஇ பிரதானத் தேர்வுகளில் 80 சதவீத மதிப்பெண்களை பெற்றி ருந்தால், பல்லைக்கழகத்தின் நுழைவுத் தேர்வை எழுதத் தேவையில்லை. நேரடியாக சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர்.


பிளஸ் 2 தேர்வுக்கான மதிப்பெண்கள் கிடைக்கப் பெறாமல் இருந்தால் ஏற்கெனவே உள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் நுழைவுத் தேர்வை எழுதலாம். இதற்கான பொது விண்ணப்பப் படிவங்கள் ஷ்ஷ்ஷ்.sஸீu.மீபீu.வீஸீ என்ற இணையதளத்தில் உள்ளது. சில படிப்புகளுக்கு ஆன்-லைன் வழியே நேர்காணல் நடத்தப்படும் என சிவநாடார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ரூபமஞ்சரி கோஷ் தெரிவித்துள்ளார்.


 


 


No comments:

Post a Comment