புதுடில்லி, மே 20_ வெளிமாநி லத் தொழிலாளர்கள் விவ காரம் தொடர்பாக வரும் 22ஆ-ம் தேதி டில்லியில் நடை பெறவுள்ள எதிர்க்கட்சிக ளின் ஆலோசனைக் கூட்டத் துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமை வகிக்கிறார். இதில் 15 கட்சிகள் பங்கேற்கின்றன.
கரோனா வைரஸ் ஊர டங்கு காரணமாக வாழ்வா தாரம் இழந்திருக்கும் இலட் சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். அவர் களில் பலர் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் கால்நடையா கவும் பலர் லாரி, வேன் உள்ளிட்ட சரக்கு வாகனங் கள் மூலமாகவும் செல்கின் றனர். இருந்தபோதிலும், போதிய உணவு இல்லாமலும், கடும் வெயிலில் பயணம் செய் வதாலும் அவர்களில் சிலர் பாதிவழியிலேயே உயிரிழக் கின்றனர்.
ஆனால், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவோ அல்லது வாகன வசதி மற்றும் நிவாரண உதவிகளை வழங் கவோ மத்திய அரசு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக் கையும் எடுக்கவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வரு கின்றன.
இந்நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இந்த அவலநிலையை போக் குவது தொடர்பாக டில்லி யில் வரும் 22ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தவுள்ளன. 15 எதிர்க் கட்சிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமை வகிப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment