வைக்கம் வீராங்கணை அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார்!
கழகத் துணைத் தலைவர் கவிஞர் புகழாரம்
வேலூர், மே 20 வேலூர், தர்மபுரி, சேலம் மண்டல மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் பெண்ணுரிமை போராட்டப் பேரிகை நாள், அன்னை ஈ.வெ.ரா .நாகம்மையார் நினைவுநாள் சிறப்புக்கூட்டம் 15.5.2020 அன்று இரவு 7 மணிக்கு காணொலி காட்சி வழியாக நடைபெற்றது.
அனைவரையும் மாநில மகளிரணி அமைப்பாளர் ந.தேன்மொழி வரவேற்று உரையாற்றினார். மாநில மகளிரணி பொருளாளர் அகிலா எழிலரசன் முன்னிலை வகித்து உரை ஆற்றினார். மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி தலைமையுரையாற்றினார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி தொடக்கவுரை யாற்றினார்.
நிகழ்வின் தொடக்கத்தில், அண்மையில் சாலைவிபத்தில் மறைவுற்ற தருமபுரி அரசு மருத்துவமனை தலைமைச் செவி லியர், கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி செயலாளர் புக ழேந்தி இணையர் குமுதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்று கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அன்னை நாகம்மையாரின் தொண்டினை, துணிவினை, நடத்திவைத்த மணவிழாக்களை, போராட்ட குணங்களை, குடிஅரசு ஏட்டினை நடத்திய பாங்கினையும், தந்தைபெரியாருக்கு துணைநின்ற நிகழ் வினையும் விளக்கி ஒருமணிநேரம் சிறப்புரையாற்றினார்.
வைக்கம் போராட்ட நிகழ்ச்சியில், அன்னை நாகம்மையார் துணிச்சல்மிக்க நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் மூன்று மண்டலங்கள் இணைந்து நடத்திய இந்த காணொலியை சிறப்பாக ஒருங்கிணைத்தார். காணொலி இணைப்பை செந் தூர்பாண்டியனும் குணா குட்டிமணியும் ஒருங்கிணைத்தனர்.
நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், மணிமொழி குணசேகரன், சேலம் மண்டலத்தலைவர் கவிஞர்.சிந்தாமணியூர் சி.சுப்ரமணியம், வேலூர் மண்டலத் தலைவர் வி.சடகோபன், பொதுக்குழு உறுப்பினர்கள் பழனி புள்ளையண்ணன், கலைமணிபழனியப்பன், மாநில ப.க துணைத் தலைவர் அண்ணா.சரவணன், இந்திராகாந்தி, ஓசூர் மாவட்ட மகளிரணிச் செயலாளர் லதாமணி, தஞ்சை மண்டல மகளிரணிச் செயலாளர் கலைச்செல்வி, தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ரமா பிரபா, மருத்துவர் சந்திரபோஸ் அம்பேத்கர், மதுரை கே.பாண்டியராஜன், பிரான்ஸ் நெல்லுப்பட்டு தங்க.இரமேசு, அபிதாபி துரை.இராயப்பன், ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
வேலூர் மண்டலச் செயலாளர் வேட்டவலம் பட்டாபி ராமன், மாநில ப.க.ஆசிரியரணி அமைப்பாளர் வா.தமிழ் பிரபாகரன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அ.சுரேசு, ஆத்தூர் திருவண்ணாமலை மாவட்டத்தலைவர் புலவர் ஏழுமலை, மூர்த்தி, அரக்கோணம் கு.சோமசுந்தரம், சின்னதுரை, வேலூர் மாவட்டமகளிரணி தலைவர் ச.ஈசுவரி, குடியாத்தம் மகளிரணி தலைவர் லதா சிவக்குமார், எழுத்தாளர் க.அருள்மொழி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் கவிஞர் சந்தீப், திவ்யாதயாளன், திருப்பத்தூர் மாவட்ட துணைச்செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட மகளிரணி செயலாளர் இ.வெண்ணிலா, பொதுக்குழு உறுப்பினர் ஜான்சிராணி, அரங்க. ரவி, நிலவன், மணிமொழி, ஊற்றங்கரை பழ.பிரபு, டார்வின்பிரபு,சிவராசு, ஓசூர் மாவட்ட கழகக் காப்பாளர் மு.துக்காராம், மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட மகளிரணி தலைவர் செல்வி செல்வம், மாவட்டமகளிரணி அமைப்பாளர் பா.கண்மணி மகளிர் பாசறை செயலாளர் து.சங்கீதா, மண்டல இளைஞரணி செயலாளர் வ.ஆறுமுகம், மகளிரணி காயத்ரி, ஒன்றிய அமைப்பாளர் ஞானசேகரன், மீனா, சதிசு குமார், தர்மபுரி மாவட்ட ப.க.தலைவர் கதிர்.செந்தில், மண்டல மாணவர்கழக செயலாளர் செல்லதுரை, மாவட்ட இளைஞரணி பொறுப் பாளர் ஏங்கல்ஸ், விடுதலை வாசகர் வட்டம் சுதாமணி, மருத்துவர் ஆர்த்தி போசு, மருத்துவர் கனிமொழி அம்பேத்கர்,மதி கண்ணன், சித்தார்த் அம்பேத்கர், நிரஞ்சனா அம்பேத்கர், மருத்துவர் திராவிடன் அம்பேத்கர், விவேக், ரேவதி பாண்டியராஜன், வழக்குரைஞர் கதிரவன், வத்தலக் குண்டு கி.சக்திவேல், அருணா சக்திவேல், கார்த்திக் சக்திவேல், ஆத்தூர் மாவட்டத்தலைவர் த.வானவில், மாவட்டச் செயலாளர் நீ.சேகர், மண்டல இளைஞரணி செயலாளர் செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வாழப்பாடி வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர் கவிஞர் வாழப்பாடி அமிர்தம்சுகுமார், ஆத்தூர் ராணிசந்திரன், பெத்தநாயக்கன்பாளையம் கருத்தம்மாள் சுரேசு, தலைவாசல் முத்துலெட்சுமிசேகர், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் சே.ஜான்சிராணி, மேட்டூர் மாவட்டச் செயலாளர் எடப்பாடி கா.நா.பாலு, கை.அறிவுமணிபாலு, மாவட்ட ப.க. தலைவர் கோவி.அன்புமதி, மாவட்ட ப.க. செயலாளர் மதியழகன், சேலம் மாவட்டத் தலைவர் கே.ஜவகர், மாவட்டச்செயலாளர் அ.ச.இளவழகன், மாவட்ட துணைத் தலைவர் பரமசிவம், மாவட்ட மகளிரணி தலைவர் சுஜாதா தமிழ்ச்செல்வம், மண்டல மாணவர் கழகச் செயலாளர் இ.தமிழர் தலைவர் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். நிறைவாக சேலம் மாநகர மகளிரணி செயலாளர் இ.கண்ணகி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment