புவனேசுவரம்,மே 20 உம்பன் புயல் மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹேடியா தீவு ஆகியவற்றுக் கிடையே கரையைக் கடக்கவுள்ளதால் சூப்பர் புயலான இதன் பாதிப்பை கருத்தில் கொண்டு ஒடிசாவின் பாதிப்பு அதிகம் ஏற்படும் 13 மாவட்டங்களி லிருந்து சுமார் ஒரு லட்சம் பேர் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சூப்பர் புயல் உம்பன் காரணமாக ஒடிசாவில் கன மழை கடும் காற்றுடன் பெய்து வருகிறது. சூப்பர் சைக்ளோன் உம்பனுக்காக சுமார் 1,704 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. ஒடிசாவின் கேந்த்ராபுராவி லிருந்து அதிகபட்சமாக 32,060 பேர் வெளியேற்றப்பட்டுள் ளனர். பத்ராக் பகுதியிலிருந்து 26,174 பேர்களும் பால சோரிலிருந்து 23,142 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சூப்பர் புயல் நெருங்க நெருங்க மக்கள் மத்தியில் பீதி அலை உருவாகியுள்ளது. பராதிப் அருகே மதியம் புயல் கடக்கும் என்று கூறியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மய்யம். இதனையடுத்து மக்கள் தங்கள் முக்கிய ஆவணங்கள் பொருட்களுடன் ஆபத்தான பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அதி தீவிர சூப்பர் புயலான உம்பன் தற்போதைய வானிலை மய்ய தகவலின் படி ஒடிசாவின் பராதீப்பிலிருந்து 125 கிமீ தொலைவில் உள்ளது. ஒடிசா கடற்கரை மாவட் டங்களில் கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரு கிறது. பராதீப்பில் 106 கிமீ வேகமுடைய காற்று வீசி வரு கிறது. பராதீப்பில் மட்டும் 197.1 மிமீ மழை பதிவாகியுள்ளது.
ஜூன் 1 முதல் 200 ரயில்கள் இயக்கப்படும்
புதுடில்லி,மே 20 ஜுன் 1ஆம் தேதி முதல் ஏசி அல்லாத 200 ரயில்களை இயக்க உள்ளதாக ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வெளிமாநில தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல இந்த 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவ தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களு டைய சொந்த மாநிலங்களுக்கு இந்த ரயில்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என பார்க்கப்படு கின்றது.
ஏ.சி இல்லாத இந்த ரயிலுக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் என்றும், வழக்கமான கால அட்ட வணைப்படி ரயில்கள் இயக்கப் படும் என்றும், இதற்கான அட்டவணை இன்னும் ஒரு சில நாட்களில் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத் தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில் தொடங்கும் வரையில் தொழிலாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலே பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத் தியுள்ளார்.
No comments:
Post a Comment