சிவகங்கை, மே 20, சிவகங்கை மாவட்டத்தில் 5 ஆயிரம் அமைப் புசாரா தொழிலாளர்களுக்கு கடந்த எட்டு மாதங்களாக ஓய் வூதியம் அளிக்கப் படாத நிலை தொடர்ந்து கொண்டிருப்பதால், தொழிலாளர்களின் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அமைப்புசாரா தொழிலாளர் களின் சமூக பாதுகாப்புக்காக நல வாரியங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் கட்டிட தொழி லாளர்கள், ஆட்டோ, பனை மரத் தொழிலாளர்கள், முடித்திருத் துவோர், தையல் கலைஞர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அவர்களுக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி, விபத்துக்கால நிவா ரணம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. சிவ கங்கை மாவட்டத்தில் அமைப்பு சாரா நலவாரி யங்களில் பல ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதில் 60 வயது நிரம்பிய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூ தியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத் தொழிலாளர் களுக்கு 8 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கவில்லை.
மேலும் ஊரடங்கால் அவர்கள் உணவிற்கே சிரமப்பட்டு வருகின் றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா ளர் வீரபாண்டி கூறியதாவது: நிதி ஒதுக்கீடு வரவில்லை என கூறி, அமைப்புச் சாரா தொழிலாளர் களுக்கு 8 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கவில்லை. தற்போதைய சூழ் நிலையில் அவர்கள் மிகுந்த சிரமத் தில் உள்ளனர்.
மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அறி விக்கப்பட்ட நிவாரண உதவியும் பலருக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சி யரிடம் புகார் கொடுத்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார், என்றார்.
No comments:
Post a Comment