செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 20, 2020

செய்தித் துளிகள்....

* சீனாவிடமிருந்து விலகி சுதந்திரமாக செயல்படாவிட்டால் உலக சுகாதார நிறுவனம் என்ற அமைப்பிலிருந்து அமெரிக்கா ஒரு மாதத்தில் வெளியேறும் என்று அமெரிக்கா மிரட்டல்.


*  புகைப்பிடிக்கும் பழக்கத்தை கை விட்டால், தீவிர கரோனா பாதிப்பை தவிர்க்கலாம் என அமெரிக்க புற்றுநோய் மருத்துவர் ஜேசன் ஷெல்ட்சர் தெரிவித்துள்ளார்.


* சென்னையில் இன்று முதல் வீடுதோறும் கரோனா சோதனை.


* அ.இ.அ.தி. மு.க.வில் ஊராட்சி செயலாளர்கள் பதவிகள் ரத்து.


* சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிப்பு.


* ஜூலை மாதம் முதல் வாரத்தில் பள்ளி வகுப்புகள் தொடங்க அனுமதிக்கலாம் என தனியார் பள்ளிகள் சங்கங்கள் அரசுக்கு பரிந்துரைத்துள்ளன.


* உம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.


* பணிபுரியும் இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்குமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவு.


* தமிழகத்தில் காற்றாலை மூலம்  நாள்தோறும் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி.


* பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் என மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவிப்பு.


No comments:

Post a Comment