காணொலிமூலம் நடைபெற்ற ஓசூர் மாவட்டக் கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 8, 2020

காணொலிமூலம் நடைபெற்ற ஓசூர் மாவட்டக் கலந்துரையாடல்


ஓசூர், மே 8 ஓசூர் மாவட்டக் கழக கலந்துறவாடல் கூட்டம் 27.4.2020 அன்று மாலை நான்கு மணிக்கு காணொலி வழியாக சிறப்பாக நடை பெற்றது. மாவட்டத் தலைவர் சு.வன வேந்தன் வரவேற்று உரையாற்றினார்.


கழகத் துணைத் தலைவர் 


கவிஞர். கலி.பூங்குன்றன் அவர்கள் பங்கேற்று, பகுத்தறிவுப் பகலவன் தந்தைபெரியார் தொலைநோக்கோடு இயக்கத்தைப் பாதுகாக்க அன்னை மணியம்மையாரையும்,   தமிழர் தலைவர் அவர்களையும் அடையாளம் காட்டியதையும், நெருக்கடி நிலை காலத்தில் ஏற்பட்ட பார்ப்பனர்களின் சூழ்ச்சியினை உடைத்தெறிந்த அன்னையாரின் போர்க்குணங்களையும், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிவரும் மாபெரும் தொண்டால் இயக்கம் செம்மாந்து நிற்பதையும், ஒன்பதாயிரம் வருமான வரம்பு உத்தரவை ரத்து செய்ய வைத்தது முதல், 69 விழுக்காடு இடஒதுக்கீடு நிலை பெற்றிட தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்கள் தந்திட்ட சட்ட அறிவை யும், பேருழைப்பையும் சுட்டிக்காட்டி 45 நிமிடம் கருத் துரை வழங்கினார்.


இந்நிகழ்வில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, காப்பாளர் மு.துக்காராம், பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பேராசிரியர் கு.வணங்காமுடி, செயலாளர் சிவந்தி அருணாச்சலம், அமைப்பாளர் செகநாதன், துணைத் தலைவர் இரா.செயச்சந்திரன், மாவட்டக் கழக அமைப்பாளர் பா.முனுசாமி, ஓசூர் மாநகரத்தலைவர் சி.மணி, செயலாளர் தி.பால கிருட் டிணன், துணைச் செயலாளர் பெ.கண்ணன், மாவட்ட மகளிரணித் தலைவர் செ.செல்வி, செயலாளர் லதாமணி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் நிஷா, செயலாளர் சங்கீதா, நகரச்செயலாளர் கிருபாசின்னச்சாமி, ஒன்றியத் தலைவர் மு.லட்சுமிகாந்தன், செயலாளர் து.இரமேசு, பகுத்தறிவாளர் கழக செயற்பாட்டாளர்கள் வே.இரமேசுவரன், செயசந்தர், சிறீதர், இளைஞரணிச் செய லாளர் வ.செ.மதிவாணன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் க.கா.வெற்றி, செயலாளர் செ.டார்வின், அமைப் பாளர் க.கா.சித்தாந்தன், பெரியார்பிஞ்சு நன்மதி, இளைஞரணி இரா.அறிவழகன் ஆகியோர் பங்குபெற்று சிறப்பித்தார்கள். நிறைவாக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பா.கண்மணி நன்றி கூறினார். நிகழ்வினை மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண் டியன் நெறிப்படுத்தினார்.


புத்தக முன்பதிவு


உலகப்புத்தகநாளை முன்னிட்டு வணக்கத்திற்குரிய தமிழர் தலைவரின் அறிக்கையினை ஏற்று   ரூ.21,000/தொகைக்குரிய புத்தகங்களை பெற்றுக்கொள்வதாக கீழ்க்கண்ட பெருமக்கள் பதிவுசெய்து கொண்டார்கள். தொகுப்புகள்-பேராசிரியர் கு.வணங்காமுடி 3,  பொறி யாளர் செகநாதன் 2, மு.துக்காராம் 1, சு.வனவேந்தன் 1, மா.சின்னச்சாமி 1, அ.செ.செல்வம் 1, சிவந்தி அருணாச் சலம் 1, பெ.கண்ணன் 1, வே.இரமேசுவரன் 1, செயச் சந்திரன் 1, சிறீதர் 1 ஆகியோர் காணொலி வாயிலாக நடைபெற்ற கலந்துரையாடலில் புத்தகங்களுக்கான முன் பதிவு செய்துகொண்டனர்.


No comments:

Post a Comment