ஜெனிவா, மே 8, 'ஏழை நாடுகளில், கரோனா வைரஸ் தொற்றின் பரவலைத் தடுக் கவும், வைரசால் உயிரிழப் புகள் ஏற்படுவதைத் தடுக் கவும், மேலும் 4.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை' என அய்.நா., கூறியுள்ளது.
அய்.நா.,வால், கடந்த மார்ச் மாதம், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டவர்களுக்கான திட்டம் ஒன்று துவங்கப் பட்டது. அதற்காக, 2 பில் லியன் அமெரிக்க டாலர்கள் கோரப்பட்டது. அதில் பாதி தொகை, ஏற்கெனவே கிடைத்து விட்டது. இந்நிலையில், அய்.நா.,வின் மனிதாபிமான விவகாரங்களின் பொதுச் செயலர் மார்க் லோகாக் தெரிவித்துள்ளதாவது:
கரோனா வைரஸ் தொற் றின் மிக மோசமான தாக் கங்களை நாம் ஏழை நாடு களில் காண இருக்கிறோம். அதைத் தடுப்பதற்காக, தற்போது பேராற்றலுடன் செயலாற்றவில்லை என்றால், ஏழை நாடுகளில் வறுமை, பசி, சண்டைகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கும். பஞ்சம் பலமடங்கு பெருகும். கரோனா வைரஸ் பெருந் தொற்றால் அதிக பாதிப் புகளைச் சந்திக்கக்கூடிய நாடுகள் பட்டியலிடப் பட்டது. அதில், ஏற்கெனவே உலக அளவில், 50 நாடுகள் இடம்பெற்றிருந்த நிலையில், புதிதாக அதில் ஆப்பிரிக் காவைச் சேர்ந்த 9 நாடுகள் இணைந்துள்ளன. இந்த நாடு களில் ஏற்படும் பாதிப்பு களைத் தவிர்க்க அனைத்து நாடுகளும் முன்வந்து உதவ வேண்டும். இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment