பிஜேபி ஆட்சியின் அலங்கோலம்: மேலும் மூவர் வெளிநாடு தப்பியோட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 12, 2020

பிஜேபி ஆட்சியின் அலங்கோலம்: மேலும் மூவர் வெளிநாடு தப்பியோட்டம்

புதுடில்லி, மே 12- விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோரைத் தொடர்ந்து, மேலும், மூன்று தொழிலதிபர்கள், ஆறு வங்கிகளில், 411 கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்து, வெளிநாட்டிற்குத் தப்பியோடி விட் டது தெரிய வந்துள்ளது.


ராம்தேவ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம், பாசுமதி அரிசி ஏற்றுமதியில் ஈடுபட்டு வந்தது. ஆந்திர மாநிலம், கர்நூ லில், மூன்று அரிசி அரவை தொழிற் சாலைகளையும், ஆறு இடங்களில், அரிசி வகைகளைத் தரம் பிரிக்கும் இடங்களையும், இந்நிறுவனம் நடத்தி வந்தது. சவுதி அரேபியா மற்றும் துபாயில் கிளை அலுவலகங் களுடன் செயல்பட்டு வந்த இந்நிறு வனத்தின் இயக்குனர்களான நரேஷ் குமார், சுரேஷ் குமார், சங்கீதா ஆகியோர், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், 173 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.


அத்துடன், கனரா பேங்க், யூனி யன் பேங்க் ஆப் இந்தியா, அய்.டி. பி.அய்., சென்ட்ரல் பேங்க் ஆப் இந் தியா, கார்ப்பரேஷன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய அய்ந்து வங்கிகளில், 238 கோடி ரூபாய் கடன் வாங்கியுள் ளனர். இந்தக் கடனை அவர்கள் திரும்பச் செலுத்தத் தவறியதால், 2016 ஜனவரியில், அக்கடன், வாராக் கடன் பிரிவில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, ஒன்பது மாதங்கள் கழித்து, வங்கி அதிகாரிகள், ராம் தேவ் இன்டர்நேஷனல் நிறுவனத் தின் தொழிற்சாலைகளுக்குச் சென்று பார்த்தனர். அப்போது, அங்கு இயந்திரத் தளவாடங்கள் எதுவும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந் தனர். காலி தொழிற்சாலை கட்ட டத்திற்கு காவலுக்கு இருந்த காவல் துறையினரிடம் விசாரித்த போது, இயக்குனர்கள் தலைமறைவாகி விட்டது தெரிய வந்துள்ளது.


இந்நிலையில், முசாதிலால் கிருஷ்ணாலால் என்பவர், 30 லட்சம் ரூபாய் கடன் பாக்கிக்காக, ராம்தேவ் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி, நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் முறை யிட்டார். இதையடுத்து, நரேஷ் குமார், சுரேஷ் குமார், சங்கீதா ஆகியோருக்கு மூன்று முறை நேரில் ஆஜராகுமாறு, 'வாரன்ட்' பிறப்பிக் கப்பட்டது; அவர்கள் ஆஜராகவில்லை.


இதையடுத்து, 2018 டிசம் பரில், மூவரும் கடன் மோசடி செய்து விட்டு, துபாய்க்கு தப்பியோடி விட்டதாகத் தீர்ப்பாயத்தில் தெரி விக்கப்பட்டது. நடவடிக்கை இந் நிலையில், கடந்த ஜனவரியில், கடன் மோசடி செய்து, தப்பியோடிய மூவர் மீதும், எஸ்சி.அய்., சி.பி.அய்.,யிடம் புகார் அளித்தது.


No comments:

Post a Comment