அயோத்திதாசர், 19 ஆம் நூற் றாண்டில் புரட்சிகரமான கருத்து களைத் துணிச்சலுடன் முன்வைத்த வர். இதழாசிரியர், சமூக சேவகர், தமிழ் அறிஞர், சித்த மருத்துவர் என்று பல முகங்களைக் கொண்ட ஆளுமை அவர்.
1845 மே 20 இல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நல்ல கல்விப் பின்புலம் கொண்ட குடும் பத்தில் பிறந்தார் அயோத்திதாசர். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் காத்தவராயன். இவரது தாத்தா கந்தப்பன் ஜார்ஜ் ஹாரிங்டன் எனும் ஆங்கிலேயரிடம் பணிபுரிந்தவர். தன்னிடம் சேகரிப்பில் இருந்த திருக் குறள் படிகளை எல்லிஸ் துரையிடம் வழங்கியவர் கந்தப்பன். நீலகிரிக்குக் குடிபெயர்ந்த அயோத்திதாசர், தோடர் இன மக்களை ஒன்றிணைத்து ‘அத்வைதானந்த சபை’ எனும் அமைப்பை உருவாக்கினார்.
இளம்வயதில் தமிழ் இலக்கண இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றார். தொடக்கத்தில் சைவம்; பிறகு வைணவத்தில் பற்றுதல் கொண்டு ஒழுகினார். ஆதித்தமிழர் இந்துக்கள் அல்ல என்று கூறிய இவர், பிறகு இம்மதங்களால் பிறப்பின் அடிப் படையில் நசுக்கப்படுவதை உணர்ந்து புத்த மார்க்கம் புகுந்தார்.
சென்னை தியோசாபிகல் சொசைட்டியைத் தோற்றுவித்த கர்னல் ஆல்காட் அவர்களுடன் 1900 இல் இலங்கை சென்று சீலம் பெற்றுப் பவுத்தர் ஆனார்.
1902 இல் தென்னிந்திய பவுத்த சாக்கிய சங்கத்தை நிறுவினார். தாழ்த்தப்பட்ட மக்கள் புத்த மதத்தை தழுவவேண்டும் என்று வலியுறுத் தினார். பல பள்ளிகளையும் நிறுவி னார். 1907 இல் இவரால் தொடங் கப்பட்ட ‘தமிழன்' என்ற ஏடு பகுத் தறிவுச் சிந்தனைகளைப் பரப்பியது. இலங்கை, பர்மா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் ‘தமிழன்' ஏடு பரவியது.
அயோத்திதாசர், 1907 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரை தமிழகத்தைத் தாக்கிய நோய் களைப் பற்றியும், அவை சார்ந்த பிரச் சினைகளைப் பற்றியும் தொடர்ந்து பதிவு செய்துள்ளார். மனிதனால் உருவாக்கப்பட்ட சமூக நோய்களை எதிர்த்த அதே வேளையில், மனி தனை அழிக்க வந்த கிருமி நோய் களில் இருந்து சமூகத்தைக் காக்கவும் முயன்றார். சித்த மருத்துவராகவும் சமூக மருத்துவராகவும் செயல்பட்ட அயோத்திதாசரின் இந்தப் பார்வை, நூற்றாண்டைக் கடந்தும், சமகால கரோனா காலத்தோடு பொருந்திப் போகிறது.
1910-களில் தமிழகத்தைப் பெரும் பஞ்சமும், அடுக்கடுக்கான நோய் களும் வேகமாக வாட்டின. அதிலும் பிளேக் நோயின் தாக்கம் கடுமையாக இருந்தது. அதனால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை, நோயாளி களுக்கான சிகிச்சை, உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை தொடர்ந்து தமிழனில் ‘சேலத்தில் பிளேக், செங்கல்பட்டில் பிளேக்' என ஊர் வாரியாக செய்தி வெளியிடப்பட்டது. இந்த நெருக்கடியான காலத்திலும், ஜாதி கொடுமைகள் நிலவியதை அயோத்திதாசரின் எழுத்துகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. அதிலும், ஜாதிப் பாகுபாட்டின் காரணமாக சுத்தமான நீரைப் பெரும்பான்மை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை, சுகாதாரமற்ற சூழல், நோய்க் காலத் திலும் வெளிப்பட்ட ஜாதிக் கொடுமை, அதிகாரிகளின் அலட்சியம் ஆகிய வற்றின் காரணமாகவே கொள்ளை நோய் பரவியது என்கிறார் அயோத்தி தாசர்.
1911 அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான தமிழனில், ‘பஞ்சமும் பெருவாரிக் காய்ச்சலும் ( கொள்ளை நோய்) பிளேக்கும் உண்டாவதற்குக் காரணம் என்ன?’ என்ற கட்டுரையை அயோத்திதாசர் எழுதினார். சமூக விடுதலைக்காகப் போராடிய பல தலைவர்களுக்கு முன்னோடியாக இருந்த அயோத்திதாசர், 1914 இல் தனது 69 ஆவது வயதில் காலமானார்.
இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் தங்கைக் கணவர் அயோத்திதாசர் என்பது குறிப்பிடத் தக்கது.
இன்று (மே 20) அயோத்திதாசரின் பிறந்த நாள் (1845).
- மயிலாடன்
No comments:
Post a Comment