உயர்ஜாதியினருக்கு ஏற்பட்டிருக்கும் கட்டாயம்
எதுவாக இருந்தாலும், உயர்ஜாதியினரின் மேலா திக்கத்தில் ஓட்டைகள் விழத் தொடங்கிவிட்டன. சான் றாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வி என்பது உயர் ஜாதியினருக்கு மட்டும் உரியதாக இருந் தது. பார்ப்பனர்கள் அனைவரும் படித்தவர் களாகவும், ஏறக்குறைய தாழ்த்தப்பட்டவர்கள் அனை வரும் கல்வி யறிவற்றவர்களாகவும் இருந்தார்கள். இன்று வரை இந்தியக் கல்வி முறையில் ஏற்றத்தாழ்வு களும், பாகு பாடுகளும் தொடர்ந்தாலும், தாழ்த்தப்பட்டவர் களின் குழந்தைகள் குறைந்த பட்சம் அரசுப்பள்ளி களில் உயர்ஜாதிக் குழந்தைகளுக்கு சமமான உரிமை யைக் கோரும் நிலையை அடைந்திருக்கிறார்கள். பள்ளிக் கூடங்களில் வழங்கப்படும் மதிய உணவை, உயர்ஜாதிப் பெற்றோர் கள் இதை விரும்பவில்லை என்றாலும் கூட, அனைத்து ஜாதிக் குழந்தைகளும் பகிர்ந்துண்ண வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. பல மாநிலங் களில் பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் மதிய உணவில் முட்டை பரிமாறப்படுவது புலால் உண்ணாத உயர்ஜாதி யினரை குமுற வைத்திருக்கிறது. உயர்ஜாதி யினரின் அழுத்தத்தின் காரணமாக பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் முட்டை பரிமாறப் படுவது தவிர்க்கப்படுகிறது.
உயர்ஜாதியினர் வேறுவழியின்றி தங்கள் அதிகாரத் தையும், சலுகைகளையும் பகிர்ந்து கொள்ளவேண்டிய கட்டாயம் உள்ள சமூக நிறுவனங்களில் ஒன்று பள்ளிக் கல்வி ஆகும். "அனைவருக்கும் வாக்குரிமை, அய்ந் தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் ஆகிய ஜனநாயக நிபந்தனைகளை எல்லாம் தாண்டியும் ஆதிக்க ஜாதியினர் அதிகாரமிக்க பதவிகளை கைப் பற்றுகிறார்கள்" என்று அம்பேத்கர் (அம்பேத்கர், 1945, பக்கம் 208) கூறினார். இருந்தாலும், மக்களாட்சி முறை உயர் ஜாதியினரை, ஒடுக்கப்பட்ட மக்களுடன் அதி காரத்தையும், செல்வாக்கையும் பகிர்ந்து கொள்ள நிர்பந்திக்கிறது.
மக்களவையில் உயர்ஜாதியினர் அவர்கள் எண் ணிக்கைக்கு அதிகமாகவே பிரதிநிதித்துவம் பெற்றிருக் கிறார்கள் (29%) என்பது உண்மையென்றாலும், மற்ற அதிகார அமைப்புகளில் பெற்றிருக்கும் அதே அளவு ஆதிக்கத்தை (75%) இங்கே செலுத்த முடியவில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக் கும், பழங்குடியினருக்கும், பெண்களுக்கும் வழங்கப் படும் இட ஒதுக்கீடுகளால், அரசியல் விவகாரங்களில் மேல் ஜாதியினரின் பிடி தளர்ந்து வருகிறது. 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற நிலையை அடைவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந் தாலும், கொத்தடிமை முறை, நில அபகரிப்பு போன்ற விஷயங்களில் நீதிமன்றத் தலையீடுகளின் காரணமாக, உயர்ஜாதியினரின் மேலாத்திக்கம் குறைந்து வருகிறது.
சமீப காலங்களில் கிராமப்புறங்களில் நடந்துள்ள சில பொருளாதார மாற்றங்களும் உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தை குறைத்திருக்கிறது. இதற்குச் சான்றாக இருக்கக்கூடிய ஒரு மாற்றத்தை, பல ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு உத்தரப் பிரதேசத்திலுள்ள மொராதாபாத் மாவட்டத்திலுள்ள பலன்பூர் என்ற சிற்றூரில் கண் டேன். அவ்வூரைச் சேர்ந்த, ஓரளவு படித்திருந்த மான் சிங் என்பவரை, சமீப காலங்களில் அவர்கள் ஊரில் நிகழ்ந்த சமூக, பொருளாதார மாற்றங்களை பட்டிய லிடும்படி கேட்டேன். அதற்கு அவர் எழுதியதாவது:
- உயர் ஜாதியினரின் வாழ்க்கையை விட, கீழ் ஜாதியினரின் வாழ்க்கை சிறந்ததாக இருக்கிறது இது உயர் ஜாதியினரின் மனங்களில் பொறாமையையும், வெறுப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது.
- கீழ் ஜாதி மக்கள் கல்வி கற்பது அதிகரித்து வருகிறது.
- ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருவதால் அவர்களுடைய வாழ்க்கைத் தரம் ஏறுமுகத்திலும், உயர்ஜாதியினரின் வாழ்க்கைத்தரம் இறங்குமுகத்தில் இருப்பதாகக் கூற முடியும்.
மான்சிங் சொன்னது எனக்கு முதலில் புரியவில்லை. மான்சிங் கீழ் ஜாதியினர் என்று சொன்னது தாழ்த்தப் பட்ட மக்களை இல்லை என்பதும், அவருடைய ஜாதியான முராஸ் ஜாதியைத் தான் என்பதும் பிறகு தான் புரிந்தது. முராஸ் என்பது உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு பின்தங்கிய சமூகம். அந்த அளவில் மான்சிங் சொன்னது மிகவும் சரியானதே. ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டதாலும், பசுமைப் புரட்சி தந்த பலன்களாலும், வேளாண் சமூகமான முராஸ் சமூகம், உயர் ஜாதியினரான தாக்கூர்களை விட அதிக பொரு ளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை ஆய்வு களின் வாயிலாக நாங்களும் அறிந்திருக்கிறோம். கையில் சேறு படாத விவசாயிகள் என்ற தங்கள் தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ள தாக்கூர்கள் போராடிக் கொண்டிருந்த அதே வேளையில், முராசுகள் புதிய நிலங்களை வாங்குவது, ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுவது, பல போக விவசாயம் மேற்கொள்வது போன்ற செயல்களில் தங்களை முழு மையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள். மறுபுறம் கல்வியிலும் தாக்கூர்களை நெருங்கிக்கொண்டிருந் தார்கள். தாக்கூர்களால் தங்கள் சினத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
பலன்பூரில் மட்டுமல்ல, உத்திரப்பிரதேசத்திலுள்ள வேறு பல கிராமங்களிலும் இதே போன்ற மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் கிராமப்புற உயர்ஜாதியினரின் பொருளாதார ஆதிக்கம், நாடு முழுவதிலும் சரிந்து வருகிறது என்று பொதுமைப்படுத்த முடியாவிட்டாலும், பல இடங்களில் அவர்களுடைய ஆதிக்கம் குறைந்து வருகிறது என்பதை உறுதியாகச் சொல்ல இயலும்.
இந்திய மக்களின் சமூக, பொருளாதார வாழ்வின் பல்வேறு அம்சங்களை உயர்ஜாதியினர் இன்றைக்கும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், அந்தக் கட்டுப்பாடுகள் தளர்ந்து வருகின்றன அல்லது தளர்ந்து விடும் ஆபத்தில் இருக்கின்றன. உயர்ஜாதியினரின் செல்வாக்கு கொஞ்சம் இறங்கினாலும் அது பெரும் சரிவாகவே கருதப்படவேண்டும்.
பதிலடி
கடந்த சில நூற்றாண்டுகளில் உயர்ஜாதியினர் இழந்த செல்வாக்குகள் அனைத்தைக் காட்டிலும் அவர்களை மிகப்பெரிய அளவில் கோபப்பட வைத் திருப்பது, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஜாதி அடிப்படையில் தரப்படும் இட ஒதுக்கீடு தான். அரசுத் துறைகளிலும், நிறுவனங்களிலும் மட்டுமே இட ஒதுக்கீடு தரப்படுகிறது என்பதாலும், அதுவும் முழு மையாக செயல்படுத்தப் படுவதில்லை என்பதாலும் அது எந்த அளவுக்கு உயர்ஜாதியினரின் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பறிக்கிறது என்று அறுதி யிட்டுச் சொல்ல முடியாது. இருந்தாலும், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை இட ஒதுக்கீட்டின் மூலம் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மக்கள் பறித்துக் கொள்கிறார்கள் என்பதே உயர்ஜாதியினரின் எண்ண மாக இருக்கிறது.
இந்துத்துவம், ஆதிக்கச் சிறுபான்மையினரின் இயக்கம்
பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்த 1990 ஆம் ஆண்டு வி. பி. சிங் முனைந்த பிறகுதான் பாஜக மறுமலர்ச்சியடைந்தது. பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முயற்சி உயர்ஜாதியினரை கோபப்படுத்தி இந்து சமூகத்தை பிளவு படுத்தியதோடல்லாமல், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்த பாஜகவை பின்தங்கிய மக்களிடமிருந்து தனிமைப் படுத்தியது. இந்த 'ஜாதி அரசியலின்' ஆபத்தை முறியடித்து, இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக ஓரணியில் திரட்டுவதற்கு, அத்வானியின் அயோத்தி ரத யாத்திரையும், அதன் முடிவில் நடை பெற்ற பாபர் மசூதி இடிப்பும் உயர் ஜாதியினருக்கும், பாஜகவுக்கும் பயன்பட்டன.
உயர்ஜாதியினரின் செல்வாக்குக்கும், ஆதிக்கத் துக்கும் ஆபத்து வரும்போதெல்லாம், இழந்தவற்றை மீட்டெடுத்து, தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்துவதற்கு இந்துத்துவ அரசியல் அவர்களுக்கு எப்படிப் பயன்படுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த சான்றாகும். இந்துத்துவ செயல்பாட்டின் முக்கிய நோக்கம் இதுவே ஆகும். இந்துத்துவ இயக்கத்தின் முதன்மை எதிரிகள் முஸ்லிம்கள் மட்டுமல்ல. கிறிஸ் துவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள், கம்யூனிஸ்டுகள், பகுத்தறிவுவாதிகள், மதச்சார்பற்றவர்கள், பெண்ணியல் வாதிகள் ஆகிய பார்ப்பனியத்தின் மேலாண்மைக்கு எதிரான அனைவருமே இந்துத்துவத்தின் விரோதி களே ஆவார்கள். இந்துத்துவம் பெரும்பான்மையி னரின் இயக்கமாக உருவகப் படுத்தப் பட்டாலும் அது ஆதிக்கச் சிறுபான்மையினரின் இயக்கமே ஆகும்.
டாக்டர் அம்பேத்கரும், இந்துத்துவமும்
இந்துத்துவத்தை உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தை மீட்டெடுப்பதற்கான இயக்கமாகப் புரிந்து கொள்வதில் உள்ள ஒரு சிக்கல், அப்படியானால் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில் அதற்கு ஆதரவாக இருப்பது ஏன் என்பது. தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துத்து வத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், ஆர்.எஸ். எஸ். இயக்கத்தையும் ஆதரிக்கிறார்களா என்பது சந்தேகத்துக்குரியது. 2019 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்களித்தது, இந்துத்துவத்தை ஆதரிப்பதற்காக என்று கூறிவிட முடியாது. அந்தத் தேர்தலில், தாழ்த்தப்பட்ட மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. இரண்டாவதாக, இந்துத்துவத்தின் சில அம்சங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை ஈர்த்திருக்கக் கூடும். சான்றாக, ஒடுக்கப்பட்ட மக்களை ஈர்ப்பதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திவரும் பள்ளிக்கூடங்கள் போன்ற சமூக சேவை அமைப்புகளைக் கூறலாம். மூன்றாவதாக, சமூக சேவைப் பணிகளைத் தாண்டி, தாழ்த்தப்பட்ட மக்களைக் கவர்வதற்காக, அம்பேத் கரை தன்னுடைய அடையாளமாகக் காட்டுவது தொடங்கி, பல்வேறு பிரச்சார உத்திகளை முழுமை யாகப் பயன்படுத்தியது. டாக்டர் அம்பேத்கரையும், இந்துத்துவத்தையும் இணைக்கும் பொதுவான எதுவும் இல்லாத நிலையிலும், ஆர்எஸ்எஸ் ஏதோ ஒரு வகை யில் அவரை தன்னுடன் இணைத்துப் பேசுவதை வழக் கமாக வைத்திருக்கிறது.
ஜாதி அமைப்பை ஒழிப்பதை இந்துத்துவத்தின் நோக்கம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஜாதி குறித்த அதனுடைய கண்ணோட்டமும், நடைமுறையும் இன்றைக்கு நிலவிவரும் ஜாதி பாகுபாடுகளுக்கு மாறுபட்டது என்றே சொல்ல வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர், சமூகத்தில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை விட ஆர்எஸ்எஸ் அமைப்பில் கூடுதல் மரியாதை கிடைப்பதாக நினைக்கக்கூடும். ஓர் ஆர்எஸ்எஸ் அபிமானி "தாழ்த்தப்பட்ட மக்களையும், மிகவும் பின்தங்கிய மக்களையும் ‘பலவீனமான ஜாதியினர்’ என்ற அடையாளங்களிலிருந்து விடுவித்து, 'இந்து' என்ற பொது அடையாளத்தை வழங்குவதாக இந்துத்துவா கூறும் வாக்குறுதி ஈர்க்கிறது" என்று கூறுகிறார். ஆனால் இந்த வாக்குறுதி ஒரு மாயை என்பதை பன்வார் மேகஸ்வனியின் அனுபவம் காட்டுகிறது. (நான் இந்துவாக இருக்க முடியாது: ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவனின் அனுபவம், 2020)
மக்களாட்சியின் அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல்
பாஜகவின் தேர்தல் வெற்றியையும், இந்து தேசிய வாதத்தின் வளர்ச்சியையும் ஒன்றாகக் கருதிவிடக் கூடாது. அதே சமயம் 2019 ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலில் பாஜக பெற்ற மாபெரும் வெற்றி ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வெற்றியும் ஆகுமென் பதையும் மறந்துவிடக்கூடாது. பாஜகவின் ஆட்சியில், அரசாங்கத்தின் முக்கிய பதவிகளான பிரதமர், குடிய ரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், மக்கள வையின் அவைத்தலைவர், முக்கிய அமைச்சர்கள், கவர்னர்கள் போன்ற பல பொறுப்புகளில் இந்து தேசியவாதத்தில் தீவிர உறுதிப்பாடுடைய, கடந்தகால ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களே இருக்கிறார்கள். மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரான உயர்ஜாதியினரின் மௌனப் புரட்சி, இப்பொழுது பெருவடிவமெடுத்து, பேச்சுரிமை, கருத்துரிமை, மறுப்பதற்கான உரிமை என்று தொடங்கி, குடியரசின் நிறுவனங்களுக்கு எதிரான தாக்குதல்களாக வளர்ந்திருக்கிறது. ஒரு புறம் மக்களாட்சித் தத்துவங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகளும், மறுபுறம் வளர்ந்து வரும் ஜாதி மோதல்களும் சமத்துவத்துக்கும், சமூகநீதிக்கும் எதி ரான போக்குகளாகும்.
- குடந்தை கருணா
ஆங்கில மூலம்: (The revolt of the Upper Castes – Jean Dreze) ஜீன் டிரஸ், வருகை தரு பேராசிரியர், பொருளாதாரத் துறை, ராஞ்சி பல்கலைக்கழகம்
ராஞ்சி - 20 பிப்ரவரி, 2020
No comments:
Post a Comment