ஒற்றைப் பத்தி - திரிபுவாதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

ஒற்றைப் பத்தி - திரிபுவாதம்!

‘‘காதால் கேட்டதால் மட்டுமே எதையும் நம்பி விடாதே!


பல தலைமுறைகளால் போற்றப்பட்டு வருபவை என்ற காரணத்தாலேயே மரபு களை நம்பாதே!


பலராலும் பேசிப் பரப்பப் படுகிறது என்ற காரணத்தா லேயே எதையும் நம்பாதே!


உன் மத நூல்களில் எழு தப்படுகிறது என்ற காரணத்தா லேயே எதையும் நம்பாதே!


உன் ஆசிரியர்களும், மூத் தோரும் சொல்கிறார்கள் என்பதனாலேயே எதையும் நம்பாதே!


வெளித் தோற்றத்திற்கு உண்மையாகத் தெரிகின்ற தர்க்கத்தையும், பழக்கத்தினால் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்ட மனச் சாய்வையும் நம்பாதே!


யாவருக்குமான நன்மைக் கும், ஆதாயத்திற்கும் ஏற்ற ஒன்றை ஏற்றுக் கொள்வதற்கு முறையான காரணத்தை நீ கண்டறியும்போது ஆழ்ந்து சிந்தனை செய், ஆய்வு செய், பிறகு ஏற்றுக்கொண்டு அதன் படி வாழ்!''


- கவுதம புத்தர் (அங்குத்தர நிகாயத்தில் கலம சுத்தம்!)


இத்தகைய பகுத்தறிவு வாதியாகிய கவுதமப் புத்தரைப் பார்ப்பனர்கள் சிதைக்கப் பார்க்கின்றனர். தத்துவப் பேராசிரியர் என்று பார்ப்பனர் வட்டாரத்தில் பேசப்படும் சர்வபல்லி டாக்டர் இராதா கிருஷ்ணன் என்ன சொல்லு கிறார்?


‘‘உபநிடதக் கருத்துகளில் சிறந்தவற்றின் கருத்தியலை ஏற்றுக்கொண்டு மனித இனத்தின் தினசரித் தேவை களுக்கு ஏற்பக் கிடைக்குமாறு செய்ததே புத்தரின் பணி யாகும். வரலாற்றுப் பவுத்தம் என்பது உபநிடதக் கொள் கையை மக்களிடையே பரப் புவதேயாகும். இப்படிப்பட்ட ஜனநாயக மாற்றங்கள் இந்துச் சமூகத்தில் இயல்பான கூறுக ளேயாகும்.''


இதோடு நிறுத்திக் கொள்ள வில்லை டாக்டர் இராதாகிருஷ் ணன். ‘‘புத்தர் இந்துவாகவே பிறந்தார், வளர்ந்தார், இறந்தார்!'' என்கிறார்!


இவற்றை எல்லாம் எடுத்துக்காட்டி ‘‘வரலாற்றில் பிராமண நீக்கம்'' (ப்ரஜ் ரஞ்சன்மணி- தமிழில் க.பூர ணச்சந்திரன்) எனும் நூலில் டாக்டர் இராதாகிருஷ்ணன் கூற்று மறுக்கப்பட்டுள்ளது.


அ) இந்து மதத்தின் அதீத (கடவுள்) இருப்பு, கர்மம், மறு பிறப்பு ஆகியவற்றை புத்தர் ஏற்றுக்கொண்டார்.


ஆ) அவர் பிராமண இந்து மதத்தை சீர்திருத்தம் செய்ய முனைந்தார்.


இ) புத்தருக்கு முன்பே எல்லா உபநிடதங்களும் தோன்றிவிட்டன.


இவை அடிப்படையற் றவை. முதலில் தானே சரி பார்க்காமல் புத்தர் எதையும் ஏற்றதில்லை என்று ஆணி அடித்ததுபோல நூலாசிரியர் பதிலடி கொடுத்துள்ளார்.


புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் என்று - ஆரியம் கூறவில்லையா? அந்த ஆரியத்தின் ‘அபிமான புத்திரரான' இராதாகிருஷ்ணன் அய்யர்கள் இப்படிக் கூறுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?


 - மயிலாடன்


No comments:

Post a Comment