அண்ணா பல்கலைக் கழக சிறப்புத் தகுதியும்- 69 சதவிகித இட ஒதுக்கீடு உறுதியும் முக்கியம்! முக்கியம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

அண்ணா பல்கலைக் கழக சிறப்புத் தகுதியும்- 69 சதவிகித இட ஒதுக்கீடு உறுதியும் முக்கியம்! முக்கியம்!!

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு (சென்னை) சிறப்புத் தகுதி வழங்குவது குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்டது தமிழக அமைச்சர்கள் குழு. (அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோரும், நிதி, சட்டம், உயர்கல்வித் துறை செயலாளர் களும் இக்குழுவில் உள்ளனர்). இக்குழுவினர் ஆலோசனை நடத்தினர்.


நேற்று (20.5.2020) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தியுள்ளனர்.


அதில் அவர்கள் முடிவு எடுத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திப்படி,


அண்ணா பல்கலைக் கழக சிறப்புத் தகுதியை மத்திய அரசு அளிக்கும் திட்டத்திற்கு - ஒரு முக்கிய நிபந்தனையின் பேரில் மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும். அதாவது 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு உத்தரவாதம் அளிக்காத பட்சத்தில், இதனை நிராகரிப்பது என்ற முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது.


தமிழக அ.தி.மு.க. அரசும், அமைச்சர்களும் இதில் எந்தவித சமரசத்திற்கும் இடம்தராமல் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடரும் என்ற உத்திரவாதம் - ஆணையின்மூலம் உறுதி செய்யப்பட்ட பிறகே, தனது ஒப்புதலை வழங்குவதில் மிகுந்த விழிப்புடன் செயலாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்ளுகிறோம்.


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்


சென்னை


21.5.2020


No comments:

Post a Comment