தொண்டராம்பட்டு மாரியப்பன் சிலை திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 27, 2020

தொண்டராம்பட்டு மாரியப்பன் சிலை திறப்பு


தொண்டராம்பட்டு, மே 27- 26.05.2020 அன்று மாலை 6 மணி தொண்டராம்பட்டுக்கு பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் மாரியப்பன் படத் திறப்பு விழா தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையிலும் மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ் ணன், மாநில ப.க.துணை தலைவர் ஆசிரியர் கோபு.பழனிவேல்,  உரத்தநாடு ஒன் றிய செயலாளர் ஆ.லெட்சு மணன், தொண்டராம்பட்டு பெரியார் பெருந்தொண்டர் உத்திராபதி முன்னிலையில் நடைபெற்றது.


உரத்தநாடு ஒன்றிய தலை வர் த.ஜெகநாதன் அனைவ ரையும் வரவேற்றார்.


சுயமரியாதை சுடரொளி ஆசிரியர் மாரியப்பன் சிலையை மாநில அமைப்பா ளர் உரத்தநாடு இரா.குண சேகரன் திறந்து வைத்தார்.


பெரியார் பெருந்தொண் டர் ஆசிரியர் மாரியப்பன் படத்தினை டி.கவுரி திறந்து வைத்தார்.


கழக கொடியை ஏற்றி வைத்து தலைமை கழக பேச் சாளர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.


மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந் தூர பாண்டியன், மாவட்ட இணை செயலாளர் ஞான சிகாமணி, மாவட்ட விவசாய அணி தலைவர் பூவை.ராம சாமி, திருவோணம் ஒன்றிய தலைவர் சாமி அரசு இளங்கோ, தஞ்சை ஒன்றிய தலைவர் ஆட்டோ ஏகாம் பரம், சமயன்குடிக்காடு சிங் கப்பூர் அறிவுக்கரசு, புதுவளவு தோழர்கள் மெய்யழகன், ராமச்சந்திரன், பெரியார் பெருந்தொண்டர் முக்கரை செல்வராஜ், ஒன்றிய துணை செயலாளர் நா.பிரபு, சுய மரியாதை சுடரொளி  ஆசிரி யர் மாரியப்பன் மகள்கள் கலைச்செல்வி- செல்வக் கண்ணு, மணியம்மை- சுந்தர் ராஜன், செந்தமிழ்ச் செல்வி -பிரகாஷ், மருமகள் மஞ்சுளா மற்றும் உற்றார் உறவினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கழக தோழர்கள் பங்கேற்றனர்


மறைந்த ஆசிரியர் மாரி யப்பன் அவர்களுடைய மகன் பெரியார்தாசன் அவர் களுடைய மகன் பெ.பிர பாகரன் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். தொண்டராம்பட்டு கிளை கழக அமைப்பாளராக பெ. பிரபாகரனை மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் அறிவித்தார். அனைவருக்கும் பெ.பிரபாக ரன் நன்றி தெரிவித்து கொண் டார்.


No comments:

Post a Comment