* கீழடியைத் தொடர்ந்து மணலூரில் (சிவகங்கை மாவட்டம்) அகழாய்வு தொடங்கப்பட்டது.
* கரோனா பாதிப்பால் பெற்றோர்கள் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் கல்விக் கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கக் கூடாது என்று தனியார்ப் பள்ளிகளுக்குத் தமிழகக் கல்வித் துறை தாக்கீது!
* சென்னையில் 23 செவிலியர்கள் உள்பட 38 மருத்துவர்களுக்குக் கரோனா தொற்று!
* விவசாயப் பணிக்கு ஆள் தேவை என்று கோவையில் விளம்பரம்!
* இரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மூன்று டன் வாழைப்பழம் பல்லடத்தில் அழிப்பு.
* ஏ.டி.எம்.கள் வழியாகவும் கரோனா பரவுகிறதாம்.
* வாழ்வாதாரம் குறைந்தவர்களுக்கு நிதி உதவி வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்.
* இந்தியாவிடம் இலங்கை அரசு ரூ.8,360 கோடி கடன் கேட்கிறது.
* முதல் தொற்று ஏற்பட்டு 45 நாள்களுக்குப் பின்தான் அமெரிக்கா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது - அதன் பலன்தான் இன்றைய நெருக்கடி!
* தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பா? இன்று அமைச்சரவை உறுதி செய்யும்.
* புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் 2021 ஜூன் வரை வகுப்புகள் இணையத்தின் மூலமே நடைபெற உள்ளது.
* இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படாத ஒரே இடம் இலட்சத் தீவுகள்.
* திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சொந்தமானவையும் - பராமரிக்கப்பட முடியாததுமான சொத்துகள் ஏலம்! (இதற்கு ஆந்திர அரசு தடை ஆணையாம்).
* கரோனாவைத் தடுப்பது எப்படி? வீட்டுக்கு வீடு கையேடு வழங்க தமிழ்நாடு அரசு திட்டம்.
* மகாராட்டிரம், தமிழ்நாடு, குஜராத், டில்லி, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள 11 நகராட்சிப் பகுதிகளில் அடுத்த இரு மாதங்களில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ப்ரீத்தி சுதன் கூறியுள்ளார்.
* டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த மருத்துவர் ஜிதேந்திர பாண்டே கரோனாவால் மரணம்.
* சென்னை இராயபுரம் மண்டலத்தில் கரோனா தொற்று இரண்டாயிரத்தை நெருங்குகிறது. ஆயிரத்தை நெருங்கும் மண்டலமாக தண்டையார்பேட்டை உள்ளது.
* 88 விழுக்காட்டினருக்கு எவ்வித அறிகுறியுமின்றி கரோனா தொற்று - சுகாதாரத் துறை
அதிர்ச்சி.
No comments:
Post a Comment