பேராசிரியர் டாக்டர் வெங்கடேசன் அவர்களுக்கு வீர வணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 16, 2020

பேராசிரியர் டாக்டர் வெங்கடேசன் அவர்களுக்கு வீர வணக்கம்!


வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் க.வெங்கடேசன் அவர்கள் (வயது 87) சென்னையில் அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (15.5.2020) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தி துயரமடைந்தேன்.


டாக்டர் வெங்கடேசன் அவர்கள் அண் ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற சமகால நெருங்கிய நண்பர். ஆழ்ந்த திராவிட இயக்கப் பற்றாளர். பிரபல வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் சத்தியநாத அய்யரின் மாணவர்.


அவர் பல ஆண்டு கோவை இராம கிருஷ்ணா கல்லூரியில் பேராசிரியராக, முதல்வராக இருந்த கல்விப் புலமையாளர். எண்ணற்ற வரலாற்று நூல்களை இறுதிவரை எழுதிக் கொண்டே இருந்தவர்.


அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் - நெருங்கிய எங்கள் நட்பு வட்டத்திற்கு உரியவர்.


எங்களது பொருளாதாரப் பேராசிரியர் மறைந்த டாக்டர் வி.அனந்தராமன் அவர்களது தங்கையின் கணவருமாவார். பழகுவதற்கு மிகவும் இனிமையான சுபாவம் படைத்தவர்.  ஆழ்ந்த படிப்பாளி, படைப்பாளர்.


அவரது மகள் சாந்தியும், மகன் சந்திரசேகரனும் அமெரிக்காவில் உள்ளனர். மற்றொரு மகன் திரு.ராஜசேகரன் அவருடன் சென்னையில் உள்ளார். அவரை நன்கு உடல்நலக் குறைவு காலத்தில் பராமரித்து, சிகிச்சை அளிப்பதில் மிக்க பொறுப்புடன் அவரது மகன் கடமையாற்றியதோடு, அவரது இறுதி விருப்பப்படி, எந்தவித சடங்குகளுமின்றி கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு  அவரது உடலை அளித்து கடமையாற்றியுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.


அவரது இழப்பு, அந்தக் குடும்பத்திற்கு மட்டுமல்ல, வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒரு பெரும் இழப்பாகும்.


அவரது மகன் ராஜசேகரன் அவர்களுடன் நேற்றே தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் கூறினேன்.


அவருக்கு நமது வீரவணக்கம்!


 


- கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


16.5.2020


No comments:

Post a Comment