காஞ்சிபுரம் மண்டல மகளிரணி சார்பில் காணொலியில் அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவுநாள் சிறப்புக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 16, 2020

காஞ்சிபுரம் மண்டல மகளிரணி சார்பில் காணொலியில் அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவுநாள் சிறப்புக்கூட்டம்


காஞ்சிபுரம்,மே 16, காஞ்சிபுரம் மண்டல திராவிடர்கழக மகளிரணி சார்பில் பெண்ணுரிமைப் போராட்டப் பேரிகை நாளான அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவுநாள் கூட்டம் 13.5.2020 அன்று இரவு ஏழுமணிக்கு காணொலி வழியாக சிறப்பாக நடைபெற்றது.


கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி தலைமை வகித்து கருத்துரை வழங்கினார்.


செங்கற்பட்டு மாவட்ட மகளிரணித் தலைவர் ஆனந்தி சுந்தரம் வரவேற்று உரையாற்றினார்.  மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி தொடக்கவு ரையாற்றினார். நிகழ்ச்சியில் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரையாற்றினார். அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையாருக்கு பெண்ணுரிமை போராட்டப்பேரிகை என்று பெயர்சூட்டியமைக்கு தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். அன்னை நாகம்மையாரின் பண்பு நலன்கள், 1938இல் சுயமரியாதை திருமணத்தை நடத்திவைத்த துணிவு, விருந்தோம்பல், உள்ளிட்ட தொண்டினை விளக்கி நாற்பது நிமிடம் சிறப்புரையாற்றினார்.


நிகழ்ச்சியில் மாநில மகளிரணி அமைப்பாளர் குடியாத்தம் தேன்மொழி அன்பரசன், பொதுக்குழு உறுப்பினர் கலைமணி பழனியப்பன், வடமணப்பாக்கம் முனைவர் மு.தமிழ்மொழி, திருவள்ளூர் மாவட்ட மகளிரணித் தலைவர் உஷா மோகனவேலு, இராணிப் பேட்டை மாவட்ட மகளிரணித் தலைவர்  செல்விலோக நாதன், பொதுக்குழு உறுப்பினர் மகேந்திரவாடி வேண்டாள் தீனதயாளன், பொன்னேரி செல்வி, சோழிங்கநல்லூர் ரேவதி ஆகியோர் அன்னை நாகம்மையார் சிறப்பு களை விளக்கி கருத்துரையாற்றினார்கள். மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன், புதுச்சேரி மாநிலத்தலைவர் சிவ.வீரமணி, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் அண்ணா.சரவணன், காஞ்சி மண்டலத் தலைவர் பு.எல்லப்பன், மண்டலச் செயலாளர் முனைவர் பா.கதிரவன், காஞ்சி மாவட்டத் தலைவர் டி.ஏ.ஜி. அசோகன் ஆகியோர் நிகழ்ச்சியின் சிறப்பினை எடுத்துரைத்தார்கள்.  கழகப் பேச்சாளர்கள் தே.அ.ஓவியா, சே.மெ.மதிவதனி, செங்கற் பட்டு மாவட்டத் தலைவர் பூ.சுந்தரம், மாவட்டச் செயலாளர் அ.செம்பியன், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் க.ஏ.மோகனவேலு, மாவட்ட இளைஞரணித் தலைவர் க.ஏ.தமிழ்முரசு, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.இரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் காஞ்சி இளையவேல், சம்பத்துராயன்பேட்டை சூரியக் குமார், செய்யாறு தி.காமராசு, மத்தூர் ஜான்சிராணி, ஓசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், பெரியார் பெருந் தொண்டர்கள் மறைமலைநகர் பக்தவச்சலம், கல்பாக்கம் இராமச்சந்திரன், அன்பு, சீனிவாசன், வீரவேல், சி.என்.வீரமணி, எஸ்.பி.ஆர்., தருமபுரி கரு.பாலன், கதிர், கதிர்.செந்தில், தி.இராமசாமி, மத்தூர் நிலவன், கணியூர். இராதாகிருட்டிணன், அரக்கோணம் கு.சோமசுந்தரம், கிருட்டினகிரி தங்கராசன், திருவண்ணா மலை மாவட்டச்செயலாளர் மூர்த்தி, புதுச்சேரி முகேசு, மகளிரணிப் பொறுப்பாளர்கள் குடியாத்தம் லதா சிவக்குமார், கலைவாணி, மருத்துவர் அனிதா செகன்பாபு, வடலூர் இரமாபிரபா, சிவகங்கை மணி மேகலை சுப்பையா, ஓசூர் கண்மணிவனவேந்தன், செல்விசெல்வம், லதாமணி, தருமபுரி சுதாமணி, அருணாபீமன், மத்தூர் இந்திராகாந்தி அண்ணா சரவணன், ஊற்றங்கரை டார்வின்பிரபு, வேலூர் திவ்யா தயாளன், உள்ளிட்டோர் பங்கேற்று மகிழ்ந்தார்கள்.


நிறைவாக பெரப்பேரி மாணவர் கழகத் தலைவர் ச.இளமதி மணியம்மை நன்றி கூறினார். நிகழ்வை மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் நெறிப்படுத்தினார்.


No comments:

Post a Comment