புதுடில்லி, மே 8- இந்தியாவில் ஜுன், ஜுலை மாதத்தில் கரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடையலாம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற் றும் மாநில அரசுகள் தீவிரமு டன் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியாவில் கரோனா தொற்றால் இதுவரை 52,952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் தொற் றுக்கு இதுவரை 1,783 பேர் உயிரிழந்துள்ளனர். 15 ஆயி ரத்து 267 பேர் குணமடைந் தும், 35,902 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஜுன், ஜுலை மாதத்தில் கரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடையலாம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறு கையில், இந்தியாவில் தற் போது வெளியாகும் தரவுகள் மற்றும் கரோனா தொற்று அதிகரித்து வரும் விகிதத்தை வைத்து பார்த்தால், ஜுன், ஜுலை மாதங்களில் நோய்த் தொற்று உச்சகட்டத்தை அடை யும் வாய்ப்பு உள்ளது. ஊரடங்கை நீட்டிப்பதால் இதில் ஏதே னும் மாற்றமும் இருக்கலாம். சில காலம் பொறுத்துதான் இதன் தாக் கம் தெரியவரும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment