சென்னை, மே 8 உடல் நலத் துக்கான புதிய பரிசோதனை களை மேற்கொள்வதற்கான அறக்கட்டளையான ஃபைன்ட் நிறுவனம் கோவிட் 19 வைரஸ் தொற்றினை கண் டறிவதற்கான பரிசோதனைக் கருவிகளில் முதல் தொகுப்பை கொள்முதல் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை இப் போது வெளியிட்டுள்ளது. இந்தக் கருவிகள் பெப்ஸிகோ இந்தியாவின் ஆதரவுடன் பெறப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அங்கீகாரத்துடன் பெப்ஸிகோ இந்தியா நிறு வனம் அளித்த ஆதரவுடன் ஃபைன்ட் அறக்கட்டளையா னது கருவிகளை கொள்முதல் செய்து வழங்கியுள்ளது.
இந்த நிலையில், இப் போது கோவிட்-19 வைரஸ் நோய்த் தொற்றினை அறிவ தற்கான பணியில் தேசிய அளவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச் சகத்துடன் இணைந்து பணி யாற்றி வருகிறது. மேலும், கோவிட் -19 வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிரான பரி சோதனைக் கருவிகளைப் பெற்று அளிப்பதில் ஃபைன்ட் அறக்கட்டளைக்கு உதவிகர மாக இருப்பதுடன், ஃபைன்ட் அமைப்பு மூலமாக நாட்டி லுள்ள பரிசோதனை அம்சங் களை வலுவாக்க சுமார் 25 ஆயிரம் கோவிட் 19 வைரஸ் நோய்த் தொற்றை கண்டறிவ தற்கான கருவிகளை வழங்க பெப்ஸிகோ இந்தியா நிறு வனம் உறுதி பூண்டுள்ளது என பெப்ஸிகோ தலைவர் அகமத் எல்ஷேக் தெரிவித்தார்.
No comments:
Post a Comment