சமூக இடைவெளியுடன் விற்பனை சேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 8, 2020

சமூக இடைவெளியுடன் விற்பனை சேவை

மும்பை, மே 8- எப்சிஏ இந்தியா, இன்று அதன் தொடுதல் இல்லா வாடிக்கையாளர் அனுபவத்தை, நடப்பு தொடர் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளிகளின் அடிப்படையில் அறிவித் துள்ளது. புக் மை ஜீப் என்னும் ஒரு டிஜிட்டல் மாட்யூலை அறிமுகம் செய்துள்ளதன் வழியாக, ரீடெய்ல் அனுபவம், தற்போது முற்றிலும் தொடு தல்இன்றி கிடைக்கப்பெறு கிறது. சாத்தியமுள்ள வாடிக் கையாளர்கள் தற்போது, விற்பனை யகத்திற்கு வருகை தராமலேயே, ஒரு தொற்று நீக்கம் செய்யப்பட்ட வாக னத்தை தங்களது வீட்டு வாயிலிலேயே பெறும் டெஸ்ட் டிரைவ் வசதியையும் பெற லாம்.


இப்புதிய ரீடெய்ல் செயல் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த, எப்சிஏ இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்கு நருமான டாக்டர்.பார்த்தா தத்தா அவர்கள், வாடிக்கை யாளர்கள் தங்கள் விரல் நுனி யில் ஜீப் - க்கான அணுகுவச தியை தொடர்ந்து பெறுவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கமாகும் என்றார்.


No comments:

Post a Comment