சிஃபிலிஸ் (Syphilis) எனப்படும் பால்வினை நோய் பற்றிய அய்ரோப்பாவின் அறியாமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 9, 2020

சிஃபிலிஸ் (Syphilis) எனப்படும் பால்வினை நோய் பற்றிய அய்ரோப்பாவின் அறியாமை

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், பத்தில் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் இந்த கொடும்நோய்க்கு இரையாகினான். ஆனால் பழி முழுவதும் மனைவிமார்கள் மீதே சுமத்தப்பட்டது. 1864-இல் அதற்கான தனிச் சட்டமும் இயற்றப் பெற்று பெண்கள் சிறைகளில் வாடினர்.


இக்குழப்பம் அமெரிக்காவிலும் பரவியது. இரு பதாயிரம் அமெரிக்கப் பெண்மணிகள் இந்நோய்த் தொற்றுள்ளவர்களாக அறிவிக்கப்பெற்றனர். மேலும் அமெரிக்கப் படைவீரர்களுக்கு இதுபற்றி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டது அல்லாமல் புதியதாக ஒரு ‘பழமொழி’யும் தோன்றியது: அமெரிக்க வீரர்கள் அவர்களின் எதிரிகளான ஜெர்மானியர்களின் குண்டுக்கு இரையாவதுதான் மிகுந்த சிறப்புடையது; பரத்தையரிடம் இருந்து வாங்கிய பால்வினைநோயினால் இறப்பதால் அல்ல (A German bullet is cleaner than a whore). பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களின் தந்தை திருவாளர் ரன்டால்ஃப் சர்ச்சில் 1873-இல் சிஃபிலிஸ் நோய்த்தொற்றுக்குள்ளானார் (பிரதமர் இதற்கு முன்பாகவே பிறந்து விட்டதால் இந்நோய்த்தொற்றிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால் பிரதமருடைய தாயார் தப்பமுடியவில்லை). பாராளுமன்ற உறுப்பினரான ரன்டால்ஃப் சர்ச்சில் இந்நோய்த்தொற்றுக் காரணமாக ஒரு அரசவிருந்தில் பன்றிபோல் ஊளையிட்டது தனிச்செய்தியாகும்.


இந்தக் கட்டுரையில் காணப்படும் தகவல்கள் அனைத்தும் பின்வரும் புத்தகத்தில் வெளிவந்துள்ளன.


In the Blood: God, Genes and Destiny.


ஆசிரியர், ஸ்டீவ் ஜோன்ஸ் (Steve Jones) 1996 ஹார்ப்பர் காலின்ஸ் (Harper Collins) வெளியீட்டாளர்கள், லண்டன்


தொகுப்பு: பொ.பாலசுப்பிரமணியன்,


பயிர் உயிரிநுண்தொழில்நுட்பவியலர்


(Plant biotechnologist)  - balasubrap@hotmail.com


No comments:

Post a Comment