தொழிலுக்கான மூலதனங்கள்
நிறைந்திருந்த
உலகில்
தொழிலாளருக்கான மூலதனம்
அவன்!
இறந்த பிள்ளைக்கு
சவப்பெட்டி வாங்கிட வழியில்லா
வறுமையின் போதும்,
எல்லோருக்கும் சமநீதி கிடைக்கப்
போராடினான்!
போராட்டக் களங்கள்
சூழ்ந்திருந்த
அவன் வாழ்வு
காதலால் நிரம்பி வழிந்தது!
குடித்துவிட்டுக் கும்மாளமிடாமல்,
கொள்கையைப்
படித்துவிட்டு போராடும்
நட்பு,
அவனை எப்போதும் நிறைத்திருந்தது!
பொருள் முதல்வாத தேசத்தில்
புரட்சியின் முதல் வாதம்
அவனே பேசினான்!
புரட்சியின் குறியீடு
சிவப்பு!
அதன் முதலீடு
மார்க்ஸ்...!
- கோமாபுரம் ஜென்னி
No comments:
Post a Comment