குருதி, மரபணு மற்றும் மதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 9, 2020

குருதி, மரபணு மற்றும் மதம்


இரத்தத்திற்கு இந்த மனிதகுலத்தின் வரலாற்றையே புரட்டிப் போட்ட ஒரு வலிமை உண்டு. அதற்கான எடுத்துக்காட்டுகளுக்கு வரலாற்றில் பஞ்சமேயில்லை. கெத்தே (Goethe) எனும் புகழ் பெற்ற ஜெர்மானிய எழுத்தாளர் அவர்தம் கற்பனையில் உதித்த ஃபாஸ்ட் (Faust) எனும் மந்திரவாதி தன்னுடைய ஆவியைச் சாத்தானிடம் விற்கத் துணிந்தானாம். அப்போது சாத்தான் கேட்டதாம்: “இதற்கான ஒப்பந்தத்தில் உன் இரத்தத்தால் கையொப்பம் இட்டுத் தா. அப்படித் தந்தால் நீ கேட்ட 24 ஆண்டு அதிக ஆயுளும், அறிவும் செல்வமும் தருகிறேன்.” உறுதிமொழிப் பத்திரம் எழுதுவதற்குக் கூட இரத்தம் பயன்பட்டிருக்கிறது என்கிறது வரலாறு.


மதக்கோட்பாட்டின் அடிப்படையில் இரத்தம் எப்படியெல்லாம் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பதைச் சில எடுத்துக்காட்டுகளுடன் இப்போது பார்க்கலாம். இன்றும் மாதவிடாய் காலங்களில் சில பழமைவாதக் குடும்பங்களில் மகளிருக்குக் கட்டுப்பாடுகள் உண்டு. யூதர்களிடையேயும், முஸ்லிம்களிடையேயும் சிறுவர்களின் முன்தோலகற்றும் நிகழ்வு இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.


 


மதவாதிகள் மற்றும் மதம் சார்ந்த கவிஞர்களைப் போலல்லாமல் அறிவியலார் இரத்தத்தை நோக்கிய விதமே சிறப்பானது. ஒவ்வொரு மனிதனின் உடலிலும் ஐந்தரை லிட்டர் இரத்தம் ஓடுகிறது. அதன் சரிபாதி சிவப்புநிற இரத்த அணுக்களால் ஆனது. ஒரு மனிதனின் சிவப்பு நிற இரத்த அணுக்களைப் சமதளத்தில் பரப்பி வைத்தால் 3600 சதுரமீட்டர் பரப்பு இருக்கும். சிவப்பு நிற இரத்த அணுக்களில் உட்கரு (nucleus)வும் இல்லை; மரபணு வேதிப்பொருளான டி. என். ஏ. (DNA) எனப்படும் உட்கருஅமிலமும் இல்லை. அதில் உள்ளதெல்லாம் ஹீமோகுளோபின் எனும் புரதம்தான். அப்புரதம் ஆக்ஸிஜனை (oxygen) உறிஞ்சிக் கொள்ளும் திறனும் கரியமிலவாயுவை (carbon dioxide) வெளியே விட்டுவிடும் திறனும் கொண்டது. இரத்தமே நம் உடலின் போர்வீரன் ஆகும்.


எதிர்பாராவிதமாக ஏற்பட்ட சிறிய வெட்டுக்காயம் உடனடியாக இரத்தம் உறைதலின் மூலம் குணமாக்கப்படுகின்றது ஆனால் ஒருசில மனிதர்களைப் பீடிக்கும் ஹீமோஃபீலியா (hemophilia) எனும் இரத்தம் உறையாக்குறைபாடு மனித மரபணுவில் உண்டாகும் ஒரு சடுதிமாற்றத்தினால் (mutation) உண்டாவதாகும். இந்த ஹீமோஃபீலியா நோயாளியான ஒரு ஆண் மகனுக்குக் காயம்பட்டால் ரத்தம் வழிவது நிற்காது. தொடர்ந்து ஒழுகிக் கொண்டேயிருக்கும். இந்நோய் ஆண்களின் வழுக்கை குறைபாடு (பெண்களுக்கு வழுக்கைக் குறைபாடு வருவதில்லை) போலவே பெண்களைத் தாக்குவதில்லை. வழுக்கையை உண்டாக்கும் மரபணு பெண்களிடம் காணப்பட்டாலும் அவர்களுக்கு வழுக்கை விழுவதில்லை. அது போலவே ஹீமோஃபிலியாவும் ஆண்களை மட்டுமே குறிவைத்துத் தாக்குகிறது. பெண்கள் இந்த குறைபாட்டைச் சுமந்து செல்லும் காரணிகள் (symptomless carriers), அவ்வளவே. அதனால், மகனைத் தாக்கும் ஹீமோஃபீலியா அவனைப் பெற்ற தாயைத் தாக்குவதில்லை.


உட்கரு இல்லாவிட்டாலும், இரத்தத்தில் இரத்தப் பிரிவு எதிர்ப்பணுக்கள் (blood group antigens; serotypes) உள்ளன. அப்பிரிவுகளுக்குள்ளே சில வேறுபாடுகள் உள்ளதால் நாம் அவற்றை A, B, AB மற்றும் O எனப் பிரிக்கிறோம். ஏதேனும் இரண்டு இரத்தப் பிரிவுகளைச் சேர்ந்த இரத்தங்கள் ஒரு மனிதன் உடலில் எதிர்பாராத விதமாக ஒன்றாகக் கலந்து விட்டால் அம்மனிதன் உயிரிழக்க நேரிடும்; அவ்வாறு நேரும்போது அவ்விரண்டு இரத்தப்பிரிவுகளை ஒவ்வாப்பிரிவுகள் (incompatible groups) என்றழைக்கின்றோம். அவ்வண்ணம் உயிரிழப்பு நிகழாவிட்டால் அந்த பிரிவுகளை தகும்பிரிவுகள் (compatible groupss) என அழைக்கின்றோம்.


 


சோவியத் ரஷ்யாவில் விண்வெளி அறிவியலுக்குக் கிடைத்த சிறப்பு, உயிரியல் ஆய்வுகளுக்குக் கிடைக்கவில்லை என்று வரலாறு கூறுகிறது. அங்கு மரபியல் ஆய்வு என்பது மனிதன், பழ ஈ (Drosophila) மற்றும் கோதுமை ஆகிய மூன்று உயிரினங்கள் தவிர மற்றவைகளில் ஊக்குவிக்கப்படவில்லை.இது வேளாண்மையில் பெரும் பங்கு வகிக்கும் பயிர் மரபியலையும் விட்டுவைக்கவில்லை. ‘சமூக முன்னேற்றம் தழுவிய’ மரபியல் எனப் பெயரிடப் பெற்ற ஓர் ஆய்வு பனிக்காலத்தில் பனியைத்தாங்கி வளரும் கோதுமைப் பயிரில் முனைவர் லைசென்கொ தலைமையில் நடைபெற்றது. விளைவு? சைபீரியாவில் அப்போது ஏற்பட்ட கொடும்பனியில் உண்ண உணவில்லாமல் கோடிக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். அதைப் பார்த்த அப்போதைய சோவியத்துப் பிரதமர் குரூஸ்சேவ் டாக்டர் லைசென்கொவைப் பார்த்து இவ்வாறு கூறினார்: “இனி உங்கள் மரபியல் ஆராய்ச்சி சைபீரியாவில் வேண்டாம்; சந்திர மண்டலத்தில் தொடரட்டும்.” அவ்வளவில் சோவியத் ரஷ்யாவில் ஸ்டாலினிய உயிரியல் ஆய்வுகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்தன. இந்நிகழ்வுக்குப்பின் 1970-இல் தான் சோவியத் ரஷ்யா உலகம் தழுவிய மரபியல் ஆய்வில் மீண்டும் இணைந்தது.


நவீன மரபியலின் தந்தை கிரிகோர் மெண்டல் (Fr. Gregor Mendel) . மதப் போதகரானாலும் அறிவியல் காட்டிய வழியில் சென்றதால் ஒல்காப்புகழ் பெற்றவர்.


அனைத்துலக அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ள முடியாத முனைவர் லைசென்கொவின் மற்ற மரபியல் ஆய்வு முடிவுகள்:



  1. சிட்டுக்குருவிகள் அதிகமாக கருப்புக் கம்பளிப் பூச்சிகளைத் தின்பதால் அவை இடும் முட்டைகளில் இருந்து கரிய குயில்குஞ்சுகள் வெளிவரும்.

  2. Gout எனும் உப்பு நோய் அதிக மது அருந்துவோர்களின் மூட்டுகளைத்தாக்கும்.

  3. மதுவிரும்பிகளின் குழந்தைகள் அனைவரும் முட்டாள்களாகவே பிறப்பார்கள்.

  4. ஒருமுறை செல்வம் சேர்த்துவிட்ட குடும்பம் பலதலைமுறைகளுக்கு பணக்காரக் குடும்பமாகவே இருக்கும்.


டாக்டர் லைசென்கொவின் சோவியத் சமூகம் சார்ந்த இவ்வளவு எண்ணவோட்டங்களுக்கும் நவீன மரபியலில் இடமில்லை. ஆனால் அக்காலத்து சோவியத்து ரஷ்யாவில் லைசென்கொவின் மரபியல் சித்தாந்தத்தை மறுத்துப் பேசியவர்கள் கேலிக்குள்ளாக்கப்பட்டனர்.


 


இரத்தம் காலகாலமாக மதத்துடன் தொடர்புப் படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மதவாதப் பார்வையைச் சிறிது விலக்கினால் தற்கால அறிவியற் பார்வையில், இரத்தம் என்பதற்கு பதிலாக மரபணுக்கள் என்று பொருள் கொள்ளலாம். இன்றும் மியஜிமா எனும் ஜப்பானியத் தீவில் அமைந்திருக்கும் ஒரு பவுத்தக் கோயிலின் வெளியே ஒரு சிவப்பு நிறச் சதுரப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் நான்கு பக்கங்களில் அமைக்கப்பட்டிருக்கும் A, B, AB மற்றும் O  எனும் குறியிட்ட சாளரத்துளைகளில் அந்தந்த குருதிப்பிரிவினைச் சேர்ந்த ஜப்பானியக் காதலர்கள் தங்களின் கையை விட்டு அவரவர்களின் குணநலன்கள் குறித்து அறிந்து கொள்ள ஆவலாக உள்ளார்கள். திருமணம் புரிந்து கொள்ள முடிவு எடுக்குமுன் அவர்கள் தவறாமல் பயன்படுத்தும் ஒரு நடைமுறை இது.


 


இரத்தப் பிரிவுகளில் காணப்படும் ஒவ்வாமைகளைத்  கண்டுபிடிப்பது எப்படி?



இரண்டு ஒவ்வா இரத்தப் பிரிவுகள் சேரும்போது (இடம்), தகும் இரத்தப்பிரிவுகள்சேர்ந்த நிலை (வலம்). வலப்புறம் உள்ள கலப்பு இரத்தம் செலுத்தப்பெறும் நோயாளிக்கு ஆபத்து விளையாது.



ஜப்பானிய திருமண நிமித்திகக் கருவி.


கி, ஙி என்பன இரத்தப் பிரிவுகளைக் குறிக்கும்.


 


மனிதன் தொன்றுதொட்டே தன்னை அறியாமலேயே இரத்தம் சார்ந்த மரபணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த கணிதமேதை பித்தகரஸ் முதல் டார்வின் வரை அவர்களின் மரபியல் சார்ந்த கூற்றுக்களை அறிவியல் உலகம் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டதேயில்லை என்பது வரலாறு. டார்வினின் காது கேளாமை குறித்த மரபணு கோட்பாடுகளில் தெள்ளிய சிந்தனை குறைவாகவே காணப்பட்டது என்பது உண்மை. டார்வின் அவர்கள் இரத்தம் எனப்படுவது பெற்றோர்களின் உயிர்நீர்ப்பொருள்கள் கலப்பதால் உருவாவது என நினைத்தார். ஏனெனில் டார்வினின் காலத்தில் மரபணு (ரீமீஸீமீ) குறித்த வரையறுக்கப்பட்ட உண்மை உருவாகவில்லை; அவ்வறிவு, பின்னாளில்தான் நமக்குச் செம்மை செய்யப் பெற்று கிடைத்தது.


No comments:

Post a Comment