இந்திய குடிசை (குறுநாவல்:1790)
-பெர்நார்தன் தெ சேன்பியேர்
தமிழில்: இரா. தேசிகப்பிள்ளை.
இலண்டன் நகரில் உள்ள ஆங்கிலக் கலைஞர்கள் சங்கம், 3,500 கேள்விகளுக்கு விளக்கம் வேண்டி பண்டிதர் ஒருவரை உலகெங்கும் அனுப்பி வைத்தது. அவர், பல நாடுகளில் உள்ள சாஸ்திர அறிஞர்களைச் சந்தித்தார். பிறகு பண்டிதர், காசியில் உள்ள வேதங் களின் பெரிய குருவான பார்ப்பனத் தலைவர் அந்தணர் ஒருவரைச் சந்தித்து, அவருக்கான பின்வரும் மூன்று கேள்விகளை முன் வைக்கிறார்.
கேள்வி 1: உண்மையை எவ்வழியாக கண்டறியலாம்?
அந்தணர் வழியாகத்தான் உண்மை அறியப்படும்.
கேள்வி 2: உண்மையை எங்கு போய் தேட வேண்டும்?
வடமொழியில் எழுதப்பட்ட நான்கு வேதங்களில் எல்லா உண்மைகளும் அடங்கிக் கிடக்கின்றன. அதன் நுட்பம் அந்தணர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
"அந்தணரைத் தவிர பிறர், அதன் நுட்பத்தை அறியக் கூடாது என்று ஆண்டவன் மறுத்திருப்பதாக ஏற்படுகிறது அன்றோ?
அப்படி ஆயின், ஆண்டவன் நேர்மையானவன் அல்லன்" என்று பதிலுரைத்தார் பண்டிதர்.
"பிரம்மாவின் விருப்பம் அது. அதை மீற எவராலும் இயலாது" என்றார் பார்ப்பனத் தலைவர்.
கேள்வி:3 உண்மையை மக்களுக்குத் தெரிவித்தல் வேண்டுமா?
எல்லாருக்கும் அதை மறைப்பது பெரும்பாலும் நன்று. ஆனால், அதை அந்தணர்களுக்கு வெளியிடுவது ஒரு கடமை ஆகும்.
பண்டிதர் சினந்து, "என்ன! உண்மையை அந்தணர்களுக்கு மட்டும் சொல்ல வேண்டுமா?
உண்மையில், அந்தணர்கள் நேர்மை அற்றவர்களே! என்றார்.
(கடவுள் நேர்மையற்றவன் என்று சொன்னபோது, முணுமுணுக்காமல் கேட்டிருந்த அவையினர், அப்பதம் அந்தணர்பால் வந்தபோது, எதிர்த்து வசை பொழிய ஆரம்பித்தனர்.)
குழம்பிய நிலையில், நகர்ப்புறம் நோக்கிச் சென்ற பண்டிதர், வழியில் ஓர் குடிசையில் வசிக்கும் பறையரைச் சந்திக்கிறார். பலர் தடுத்தும், குடிசையில் ஒரு நாள் அவருடன் தங்குகிறார். அதே மூன்று கேள்விகளைப் பண்டிதர், அவரிடமும் எழுப்புகிறார். அவரின் தெளிந்த விளக்கத்தையும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட நிலையிலும் அவர் அறிவின் ஆழத்தையும், யதார்த்த வாழ்க்கை முறை கண்டு வியக்கிறார்.
பல நாடுகள் சென்று கண்டறிந்த பல விடைகளைத் தூர வைத்துவிட்டு, இந்தியக் குடிசையில் வாழ்ந்த இந்த ஒடுக்கப்பட்ட ஏழையின் பதில்களை மனதில் அசைபோட்டு கொண்டே நாடு திரும்புகிறார் பண்டிதர்.
அன்றைய இந்திய சமூக நிலைகள், பார்ப்பனியம் ஏற்படுத்திய தீண்டாமை, தீட்டு, மூடநம்பிக்கை, ஏற்றத்தாழ்வு, வேத புராணத்தை வைத்து இழிவுபடுத்தி துன்புறுத்துதல், தான் இழிவு படுத்தப்படுவதைக் கூட உணராது, பக்தி பயத்தில் உள்ள அப்பாவி மக்கள் என அனைத்து நிகழ்வுகளும் இந்த நாவலில் இடம் பெற்றுள்ளது.
- வினோத்குமார், ஆத்தூர்
No comments:
Post a Comment