* 2025 ஆம் ஆண்டுக்கான ஊட்டச் சத்து இலக்குகளை எட்டாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. ஊட்டச் சத்து குறைபாடு அதிகமாக உள்ள நாடாகவும் உள்ளது.
* 2020 இல் உலகப் பொருளாதார வளரச்சி 3.2 விழுக்காடாக இருக்க, இந்தியாவோ 1.2 விழுக்காட்டில் தள்ளாடும்.
* டாஸ்மாக் கடையை மூடக்கோரி மதுரை பொன்னகரத்தில் பெண்கள் முற்றுகை - ஆறு பேர் கைது.
* மே 31 வரை தமிழ்நாடு, கேரளா, மகாராட்டிரா, குஜராத் மாநிலத்தவர்கள் கருநாடகத்தில் நுழையத் தடை!
* தொழிலாளர்கள் நடந்து சென்றால் அதிகாரிகள்மீது நடவடிக்கை - உ.பி. அரசு எச்சரிக்கை!
* இரண்டு நாள்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.300 கோடியாம்.
* ஜூன் 12 இல் மேட்டூர் அணை திறப்பு.
* ஜூன் 6 வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம்.
* முதலமைச்சர் பழனிசாமியுடன் செய்தித்தாள் நிறுவனத்தினர் சந்திப்பு.
* காய்கறி, பழங்கள் விவசாயிகளுக்கு இவ்வாண்டு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு.
* தமிழகத்தில் இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் 4,132 பேர் நேற்று மூன்று ரயில்களில் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
* தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மருத்துவ காரணங்களைத் தவிர பிற காரணங்களுக்காக விடுப்பு எடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
* சென்னையில் 144 தடை மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டதாக பெருநகர காவல் ஆணையர் விசுவநாதன் உத்தரவு.
* வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆம்பன் புயலால் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை மய்யம் எச்சரிக்கை.
No comments:
Post a Comment