செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 12, 2020

செய்தித் துளிகள்....

* மே 31 வரை - விமானம், இரயில்களை இயக்க வேண்டாம் என்று பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை.


* தென்மேற்கு பருவக் காற்று மே 16 தொடங்கும்.


* டாஸ்மாக் - தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை.


* மக்கள் விருப்பத்துக்கேற்ப ஊரடங்கில் தளர்வு நடவடிக்கை - பிரதமர் அறிவிப்பு.


* தொழிலாளர்களின் இரயில் கட்டணத்துக்காக காங்கிரஸ் அளித்த ஒரு கோடி ரூபாயை தமிழக அரசு ஏற்க மறுப்பு.


* விவசாயிகள், சுய உதவிக் குழுவினருக்குக் கூடுதல் கடனுதவி வழங்கப்படுவதாக ஸ்டேட் வங்கி நிர்வாகம் அறிவிப்பு.


* மரத்திலேயே பழுத்து வீணாகும் வாழை - நாமக்கல் விவசாயிகள் வேதனை!


* சொந்த ஊர்களுக்குச் செல்ல 18 ஆயிரம் வெளிமாநிலத்தவர்கள் விண்ணப்பம்.


* கோவிட் 19 தொற்றுக் காரணமாக இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை 27.11 விழுக்காடு அதிகரிப்பு.


* ஜம்மு காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தியின் காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு.


* 38 வகைக் கடைகள் தமிழ்நாட்டில் திறப்பு.


* ஊரடங்கைத் தளர்த்திய பின் ஜெர்மனியில் நோய்த் தொற்று அதிகரிப்பு.


No comments:

Post a Comment