கரோனாவில் அரசியல் செய்கிறீர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 12, 2020

கரோனாவில் அரசியல் செய்கிறீர்கள்!

பிரதமரிடம் மம்தா வைத்த கருத்து!



கொல்கத்தா, மே  12 கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஊர டங்கு நடைமுறை மோச மான திட்டமிடலுடன் செயல்படுத்தப்படுவது முர ணாக இருக்கிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று (11.5.2020) பிரதமர் மோடியிடம் பேசும்போது அடுக் கடுக்கான குற்றச்சாட்டு களை வைத்துள்ளார்.


கரோனா வைரஸ் பர வலைத் தடுக்கும் நோக்கில் 3- ஆவது கட்ட ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த கட்டம் குறித்தும், பொருளாதார நடவடிக்கைகளை தொடங் குவது குறித்தும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலிமூலம் நேற்று (11.5.2020) ஆலோ சனை நடத்தினார்.


அந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பேசியது குறித்து அந்தக் கட்சி அறிக் கையாக வெளியிட்டுள்ளது.


அதில் கூறப்பட்டுள்ள தாவது:


‘‘கரோனா வைரஸ் பர வலைக் கட்டுப்படுத்த நடை முறைப்படுத்தப்பட்ட ஊர டங்குக்கும், மத்திய அரசு அதன்பின் வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகள், தளர்வுகளுக்கும் பல்வேறு முரண்கள் இருக்கின்றன. குறிப்பாக தேசிய அளவில் ஊரடங்கு நடவடிக்கை மோசமான திட்ட மிடலு டன் நடைமுறைப் படுத்தப்படுகிறது.


மாநிலத்தில் உள்ள களச்சூழலை ஆய்வு செய்து எந்ததெந்தத் துறைகள் செயல்பட வேண்டும், செயல்பட வேண்டாம் என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டும்.


ஒருபுறம் ஊரடங்கைத் தீவிரமாக நடைமுறைப் படுத்துங்கள் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி வருகிறது. மற்றொரு புறம் ரயில் சேவையைத் தொடங்கி, மாநில எல்லைகளைத் திறக் கிறீர்கள். ரயில்களை அனு மதிப்பதும், நில எல்லைகள், உள்ளிட்ட அனைத்தையும் திறந்துவிடுவதுதான் ஊர டங்கின் நோக்கமா? இது முரணாக இருக்கிறது.


கரோனாவால் பாதிக்கப் பட்ட முதல் 10 மாநிலங்களில் மேற்கு வங்கம் கடைசியில் இருக்கிறது. இருப்பினும் எங்களுக்கு எதிராக மத்திய அரசு வேறுபாடு காட்டு கிறது என்பதைச் சொல் லவே வேதனையாக இருக் கிறது.


தொழிலாளர்களுக்கு ஆதரவான பல்வேறு சட் டங்களை, உரிமைகளைப் பறிக்கும் விதமாக அதை ரத்து செய்த உத்தரப்பிரதேச அரசு பற்றி மத்திய அரசு ஒரு கேள்வி கூட எழுப்பா தது வியப்பாக இருக்கிறது.


எங்கள் மாநிலத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். சித் தாந்த ரீதியான போர் நடத்த இது சரியான நேரம் இல்லை. ஆனால், இந்தப் போர் நாள்தோறும் நடக் கிறது. கூட்டாட்சி அமைப்பு ஒருபோதும் அடித்து தரை மட்டமாக்கப்படக் கூடாது. ஊரடங்கு குறித்த தளர்வு கள், ஊரடங்கை எப்போது தளர்த்துவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும்.


மத்திய அரசுடன் இணைந்து கரோனாவை எதிர்த்துப் போராடுகிறோம். ஆனால், அரசியல் ரீதியாகத் தேவையில்லாமல் மேற்கு வங்கம் குறிவைக்கப்படு கிறது. மாநிலங்களிடம் பொறுப்பை மாற்றுவதற்குப் பதிலாக, எவ்வாறு முன் னோக்கிச் செல்ல வேண்டும் என்பது குறித்த தெளிவான சிந்தனையுடன் மத்திய அரசு வர வேண்டும்.


மேற்கு வங்கம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் கூட்டாட்சித் தத்துவத்தை யும், மனிதநேயத்தையும் மதித்து நடக்கின்றன. எங் களுக்கு எந்தவிதமான முன்அறிவிப்பும் கொடுக் காமல் மத்திய அரசு உயர் மட்டக் குழுவை அனுப்பி மேற்கு வங்கத்தில் கரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அனுப்பியது.


அதேபோல புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் கட்டணத்தை அவர்களே செலுத்துகிறார்கள். மத்திய அரசால் முடியாவிட்டால், புலம்பெயர் தொழிலாளர் களுக்கு நாங்கள் செலுத்து கிறோம். அனைத்து மக்க ளுக்கும் 100 சதவீதம் பரி சோதனை நடத்துவதற்கான கருவிகளை வழங்கிட வேண்டும். தொழிலாளர்கள் எந்தவிதமான நோய்த் தொற்றும் இல்லாமல் சொந்த ஊருக்குத் திரும்ப வும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.


இவ்வாறு மம்தா பானர்ஜி  தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment