ஏட்டுதிக்குகளிலிருந்து.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

ஏட்டுதிக்குகளிலிருந்து..

டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:



  • கரோனா வைரஸை இந்தியா தங்கள் நாட்டுக்குப் பரப்புவ தாகவும், அதற்கு ‘இந்தியா வைரஸ்’ என பெயரிடுவதாகவும் நேபாள நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒளி அந்நாட்டு நாடாளுமன்றத் தில் கூறி உள்ளார்.

  • கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றப்பட்டது. 4000 கடைகளுக்குப் பதிலாக 200 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது. எனினும், நீண்ட தூரத்தில் இருப்பதால், காய்கறி வியாபாரம் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது என வியாபாரிகள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

  • கரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை 10-ஆம் வகுப்புத் தேர்வினை ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • அதிவேக அம்பன் புயல் காரணமாக மேற்கு வங்கம், ஒடிசா மாநிலக் கடலோரப் பகுதிகள் வெகுவாக அழிந்துள்ளன. ஆறு பேர் இறந்துள்ளனர். ஆறரை லட்சம் மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

  • குடியுரிமை திருத்த மசோதா, 1985 அசாம் மாநில ஒப்பந்தந்திற்கு எதிராக உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு:



  • இந்தியாவில் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 16 பில்லியன் அமெரிக்க டாலர் (அதாவது 1600 கோடி டாலர்) பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர். இது பொருளாதாரப் பின்னடைவை வெகுவாக ஏற்படுத்தும் என அமெரிக்க ஆய்வுக்குழு அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய ரூபாயில் இது ரூ.1,20,000 கோடியாகும்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், புதுடில்லி பதிப்பு:



  • கரோனா தொற்றுக் காரணமாக முழு அடைப்பை மத்திய அரசு முறையாகக் கையாளவில்லை; தொழிலாளர்கள் சம்பளத்தை, தொடர்ந்து தந்திட வங்கிகள் மூலம் தொழில்துறைக்கு கடன் அளித்திருந்தால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இன்னல் களையப்பட்டிருக்கும் என இந்திய தொழில்துறையின் கூட்டமைப் பின் முன்னாள் தலைவர் நவ்சாத் போர்ப்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.


தினமணி, சென்னை பதிப்பு:



  • அண்ணாப் பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் குறித்த மத்திய அரசின் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க 69 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்த உள்ளது.


தி இந்து, சென்னை பதிப்பு:



  • தேசியம் மிகப் பெரிய பிரச்சினைகளை ஒரு நாளும் தீர்க்காது; இந்தியா தனது நாட்டில் நிலவும் சமத்துவமின்மையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பாரீஸ் பல்கலைக்கழகப் பொருளா தாரப் பேராசிரியர் தாமஸ் பிக்கட்டி 'தி இந்து' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார்.


டைம்ஸ் ஆப் இந்தியா, டில்லி பதிப்பு:



  • கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல் முறையாகப் பங்கேற்க சிவசேனா தலைவரும், மகாராட்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே முடிவு.


எகனாமிக் டைம்ஸ், மும்பை பதிப்பு:



  • வாடகைக் கார் நிறுவனமான ‘ஓலா’, 1400 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதே போன்று ஓயோ 5000, உடான் 3000, சுவிக்கி 1100, கியூர்பிட் 800, பேடைம் 700, ஜொமாட்டோ 520, லிவ்ஸ்பேஸ் 450, ஷேர்சேட் 101 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறித்த ஆய்வு மேற்கொண்ட எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது..


- குடந்தை கருணா,


21.5.2020


No comments:

Post a Comment