செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 14, 2020

செய்தித் துளிகள்....

* தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு அரும்பாவூர் மரச் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.


* முழு கவச உடைகளை அணிவதால் மருத்துவர்களுக்குப் பல்வேறு உடல் உபாதைகளாம்.


* ஊரடங்கால் முக்கிய துறைகள் தவிர மற்றவை 16 விழுக்காடு வர்த்தகம் பாதிப்பு!


* 2017 ஆம் ஆண்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பில் இந்தியாவிலேயே உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.


* சீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வரும் பன்னாட்டு நிறுவனங்களால் இந்தியா பலன் அடையும் என்று உறுதியாகக் கூற முடியாது என்கிறார் பிரபல பொருளாதார அறிஞரும் நோபல் பரிசு பெற்றவருமான அபிஜித் பானர்ஜி.


* மும்பை தாராவியில் மட்டும் கரோனா பாதிப்பு 1028.


* கரோனாவுடன் நாம் தொடுப்பது நீண்ட காலப் போர் என்கிறார் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்.


* 542 சிறப்பு இரயில்களில் 6.48 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.


* மத்திய பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - வியூகம் வகுக்கப்படுகிறது.


* அமெரிக்கா - நியூயார்க்கில் ஜூன் 2020 வரை ஊரடங்கு.


* சென்னை கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் 9 கர்ப்பிணிகள் பிரசவத்துக்குப்பின் நலம் பெற்றனர்.


* கொங்கு மண்டலம் கரோனா தொற்று இல்லாததாகிவிட்டது. (பச்சை நிறத்துக்கு மாறியது).


* நீதிபதிகள், வழக்குரைஞர்கள் உடையின் நிறம் மாறுகிறது.


* வெளியில் செல்ல முடியாத நிலையில், டில்லி விமான நிலையத்தில் ஒரு ஜெர்மனியர் 55 நாள் கழித்தார்.


* கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு ரூ.3100 கோடி ஒதுக்கீடு. (வெண்டிலேட்டர் வாங்க ரூ.2000 கோடி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பராமரிப்புக்காக ரூ.1000 கோடி, தடுப்பூசி உருவாக்கும் திட்டத்துக்காக ரூ.100 கோடி).


* பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்துச் செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கவேண்டும் - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்.


 


No comments:

Post a Comment