மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 18, 2020

மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகள்

காங்கிரஸ் குற்றச்சாட்டு


புதுடில்லி,மே18 மத்திய அரசின் 20 லட்சம் கோடி பொருளாதார சலுகை அறிவிப்புகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும். முன்னாள் மத்திய அமைச்சரு மான ஆனந்த் சர்மா, காணொலி மூலமாக நேற்று (17.5.2020)  அளித்த பேட்டியில் கூறியதாவது:


பிரதமர் மோடி அறிவித் துள்ள பொருளாதார ஊக் குவிப்பு சலுகை அறிவிப்பின் மதிப்பு 20 லட்சம் கோடி அல்ல. அதன் மொத்த மதிப்பு 3.22 லட்சம் கோடி மட்டுமே. இது, நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 1.6 சதவீதமாகும். நான் சொல்லும் இந்த கணக்கு தவறாக இருந்தால், மத்திய நிதியமைச்சர் இதை மறுக்க லாம் அல்லது என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத் தலாம். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.


இந்த பொருளாதார சலுகை அறிவிப்புகள் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு நிதியமைச்சர் பதில் அளிக்க வேண்டும். அதற்கு பதிலாக கேள்விகள் கேட்கக் கூடாது. மத்திய அரசின் சரியான திட்ட மிடுதல் இல்லாத காரணத்தால், லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் சாலை வழி யாக நடந்து செல்கின்றனர். இவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலங்கள் குறித்து, நாட்டுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். ஏழை மக் களின் கைகளுக்கு பணம் நேர டியாக சென்று சேருவதற்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். ஏழை குடிமக்கள் அரசால் கைவிடப்பட்டுள்ள னர். அவர்களின் அடிப்படை உரிமைகளும், சட்ட உரிமை களும் மீறப்பட்டுள்ளன. இதற் காக மத்திய அரசு அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment