மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 17, 2020

 மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பு

புதுடில்லி, மே 17 இஸ்ரோவின் கட்டமைப்பு வசதிகளை தனியாரும்  பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப் படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.


கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலி ருந்து தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறை களையும் மீட்டெடுக்கும் வகையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பலான சிறப்பு திட்டங் கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.


அதன்படி, பல்வேறு துறையினருக்குச் சலுகைகள் புதிய திட்டங்களை நிதிய மைச்சர் கடந்த மூன்று நாள் களாக அறிவித்து வருகிறார். 4- ஆவது நாளாக நேற்றும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். நிதியமைச்சர் அறிவிப்பின் முக்கிய அம்சங் கள் வருமாறு:-


யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவ னங்கள் தனியார் மயமாக்கப் படும்.


மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படுவதால் சேவை மேம்படும்.


மருத்துவமனை, பள்ளி களைக் கட்டமைப்பதில் தனி யார் முதலீடுகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும்.


சமூகக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு சுமார் ரூ.8,100 கோடி ஒதுக்கப்படும்.


விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்புக்கும் முக் கியத்துவம்.


செயற்கைக்கோள் தயா ரிப்பு, ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பை ஊக் குவிக்கத் திட்டம்.


 இஸ்ரோவின் கட்டமைப்பு வசதிகளைத் தனியாரும் பயன் படுத்திக் கொள்ள அனுமதி.


மருத்துவத்துறையில் பயன்படும் கதிரியக்கத் தனி மங்களைத் தயாரிப்பதில் தனி யார் பங்களிப்புக்கு அனுமதி.


புற்றுநோய் உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்து வதில் கதிரியக்கத் தனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.


உணவுப் பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க அய்சோடோப்பு களை உருவாக்க தனியார் பங்களிப்புக்கு அனுமதி.


இவ்வாறு நிதி அமைச்சர் கூறினார்.


No comments:

Post a Comment