செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 17, 2020

செய்தித் துளிகள்....

* புலம்பெயர்ந்த 8 கோடி பேருக்கு ரேசன் பொருள்கள் வழங்கவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு.


* சிவப்பு மண்டலங்களில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.5,000 வழங்கக் கோரி தொடுக்கப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி.


* புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று மத்திய - மாநில அரசுகளை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.


* நல வாரிய உறுப்பினர்கள் அல்லாத முடி திருத்துவோருக்கு ரூ.2,000 வழங்கிட தமிழக அரசு அறிவிப்பு.


* மேட்டூர், முல்லை பெரியாறு, பவானி உள்ளிட்ட 5 முக்கிய அணைகளின் நீர் இருப்பு சரிவு.


* ரஷ்யாவில் கரோனாவுக்குத் தடுப்பு மருந்து  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஒரு தகவல்.


* ஊரடங்கு உத்தரவை மீறியதாக சென்னையில் ஒரே நாளில் 697 ஆட்டோக்கள் பறிமுதல்.


* ஊரடங்கால் கல்வி கற்பித்தலில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய 12 பேர் அடங்கிய நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.


* உயர்நீதிமன்ற தாக்கீது காரணமாக 12 மணிநேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்ற உத்தரவை உ.பி. மாநில பி.ஜே.பி. அரசு பின்வாங்கல்.


* இந்தியாவில் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 6,37,500.


* கோவிலுக்கு வருமானம் கிடைக்காததால், கேரள மாநிலத்தில் கோவில் நிலங்கள்  விவசாயத்திற்காகக் குத்தகைக்கு விடப்படுகின்றன.


* கடந்த 15 நாள்களில் 1074 சிறப்பு ரயில்கள்மூலம் 14 லட்சம் மக்கள் சொந்த ஊர் திரும்பினர்.


* மதுப் பாட்டில்களை வாங்குவதற்காக டோக்கனை கலர் பிரிண்ட் அவுட் எடுத்து மாட்டிக் கொண்ட அவலம்!


* கந்து வட்டிக்குக் கடன் வாங்கி மது வாங்கும் பரிதாபம்!


* ஊரடங்கினாலும், ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ரூ.2 லட்சம் உண்டியல் காணிக்கை.


எச்சரிக்கை!


உலகில் கரோனா பாதிப்பு 46,79,698; உயிரிழப்பு 3,10,556.


இந்தியாவில் பாதிப்பு 90,927; உயிரிழப்பு 2,872.


தமிழ்நாட்டில் பாதிப்பு 10,585; உயிர்ப்பலி 74. நேற்று மட்டும் பாதிப்பு 477.


சென்னையில் பாதிப்பு 6271; நேற்று மட்டும் பாதிப்பு 332; உயிரிழப்பு 51. காவல் துறையினர்


பாதிப்பு 143.


No comments:

Post a Comment